செய்திகள்

அஞ்சல் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு: வடிவேல் சுரேஷின் வேண்டுகோள்:

postal department

பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு அஞ்சல் திணைக்களத்தில் வேலைவாய்பு பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தனது அமைச்சின் மூலமும் முன்னெடுக்கபட்டு வருவதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவிதுள்ளார்.

அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சின் ஏற்பாட்டில் அஞ்சல் திணைக்களத்தில் சிற்றூழியர்களுக்கான ஊமியர்கள் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. இதில் மலையக இளைஞர் யுவதிகளையும் இனைத்துக் கொள்வது தொடர்பில் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சுடன் தொடர்பு கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டுக்கான அஞ்சல் திணைக்களத்தின் சிற்றூழியர் சேவையின் தேவைக்காக தினசரி சம்பள அடிப்படையில் கடமைகளை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2019.04.01 முதல் பிரதேச அத்தியட்சகர் பிரிவு மட்டத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ஊவா மாகாணம்¸ மத்திய மாகாணம்¸ சப்ரகமவ மாகாணம் உட்பட மலையத்தின் அனைத்து இளைஞர் யுவதிகளும் விண்ணபிக்க முடியும். இச் சந்தர்பத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்  இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top