செய்திகள்

இன்னும் 10 நாட்களுக்கு மின் வெட்டு தொடரும்

ceb

நாட்டின் பல பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு தொடரும் என மின் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மின் உற்பத்தியை விடவும் மின்சாரத்துக்கான கேள்வி அதிகமாக காணப்படுகின்றது. இதனால், இன்னும் 10 நாட்களுக்கு மின் வெட்டு நடைமுறையில் இருக்கும்.

இந்த நிலைமையை சீரமைப்பதற்கு பொது மக்களும் தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு வேண்டுகோள் விடுகின்றோம்.  பயன்பாட்டில் உள்ள குளிரூட்டிகளில் ஒன்றை தற்காலிகமாக செயற்படுத்தாமல் நிறுத்தி வைக்குமாறும், பயன்பாட்டில் உள்ள மின் விளக்குகள் இரண்டை அணைத்து வைக்குமாறும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுகின்றேன் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

இவ்வாறு செய்வது தேசிய ரீதியில் மின் சாரத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சீர் செய்ய பெரும் உதவியாக அமையும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

dc.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top