செய்திகள்

இரண்டு வருடங்களுக்கொரு முறை நடைபெறும் பல்கலைக்கழக ஆராய்ச்சி விருதுகள் விழா இம்முறை ஜனாதிபதி மாளிகையில்

university research awarding

பல்கலைக்கழக ஆராய்ச்சி விருதுகள் விழா ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் அண்மையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இரண்டு வருடங்களுக்கொருமுறை பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் பணிப்பாளர் குழுவினால் ஏற்பாடு செய்யப்படும் இந்த விருது விழா இம்முறை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 06 பிரதான துறைகளின் கீழ் தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக ஆற்றும் சேவையை பாராட்டும் முகமாக ஜனாதிபதி விருதுகளை வழங்கி வைத்தார்.

இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பிற்குள் ஆராய்ச்சிகளை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஆற்றப்பட்ட விசேட சேவை கருதி இலங்கை பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்கவினால் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுப் பரிசொன்று வழங்கி வைக்கப்பட்டது. நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top