செய்திகள்

எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயார் – இராணுவ தளபதி

mahesh senanayake

கடந்த 2009 ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்களை கொன்று போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக இலங்கை இராணுவம் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், இலங்கை இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக வெலிகம பகுதியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதற்கு நாங்கள் அச்சப்படவில்லை. ஏனென்றால் நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. சர்வதேச விசாரணை தேவையில்லை. நமது நீதித்துறையே விசாரணை நடத்தலாம் என தெரிவித்தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்பாவி மக்கள் உயிரிழப்பு இல்லாமல் எந்த போரும் நடக்காது. இது கடினமான உண்மை. அதற்காக நாங்கள் அப்பாவி மக்களை கொன்றோம் என்று அர்த்தம் அல்ல. பழையதை தோண்டாதீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் செய்த ஆக்கப்பூர்வ செயல்களை பாருங்கள் என்றும் அவர் கூறியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. (அ)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top