செய்திகள்

ஏப்றல் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை

thooku kayiru

சிறைச்சாலையிலுள்ள தூக்குத் தண்டனை நிறைவேற்றுபவர் (அலுகோசுவன்) எதிர்வரும் ஏப்றல் மாதம் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜே.எம்.ஜே.டபிள்யு. தென்னகோன் அறிவித்துள்ளார்.

இப்பதவிக்காக இதுவரையில் 79 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், இவ்வாறு விண்ணப்பித்தவர்களே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதவிக்காக விண்ணப்பித்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கடுமையான கோபம் கொண்டவர்கள் எனவும் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நேர்முகப் பரீட்சைக்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் தலையீடுகள் இன்றி மிகத் தகுதியானவர்கள் இதற்காக தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

dc.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top