செய்திகள்

ஏழு மில்லியன் வாகனங்கள்

champika

தற்பொழுது நாட்டில் ஏழு மில்லியனுக்கு மேற்பட்ட வாகனங்கள் உண்டு .

இதன் காரணமாகவே நாட்டில் வீதிகளில் வாகன நெரிசல் இடம்பெறுவதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கடுகதி பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கும் மென் ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். நான்கு மென் ரயில் கட்டமைப்பும் மாக்கும்புரயில் பல்லின போக்குவரத்து மத்திய நிலையம் இம்மாதம் 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் இன்று காலை ஆரம்பமானது. விவதாத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1950 ஆம் ஆண்டில் நாட்டு மக்களின் எண்ணிக்கை சுமார் 80 இலட்சம் ஆக காணப்பட்டது.

அப்பொழுது வாகன கட்டமைப்புக்குள் மோட்டார் சைக்கிள்கள் கார்கள் பஸ்கள் அடங்கல்களாக மொத்தம் 5000 க்கு மேல் இருந்தன. இப்பொழுது நிலைமை என்ன எமது மக்கள் தொகைக்கு ஏற்ப 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் மக்கள் தொகை மூன்று மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது. இதே போன்று வாகனங்களின் எண்ணிக்கையும் ஆயிரக் கணக்கில் அதிகரித்துள்ளது.  இன்று நாட்டில் சுமார் 7 மல்லியன் வாகனங்கள் காணப்படுகின்றன .இதன் காரணமாகவே வீதிகளில் வாகன நெரிசல்கள் காணப்படுகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் பெருந்தெருக்களில் வீதிகளில் வாகன நெரிசல்களின் காரணமாக இடம்பெறும் எரிபொருள் வீண்விரயங்களினால் ஏற்படும் விரயங்கள் தொடர்பில் மொறட்டுவ பல்கலைகழகங்களினால் மேற்கொண்ட ஆய்வுகளில் வரவு செலவு திட்டத்தில் இவற்றுக்காக ஒதுக்கப்படும் நிதியிலும் பார்க்க பெருந்தொகை செலவாகுவதாகவும் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக தற்பொழுது நெடுஞ்சாலைகள் வீதிகளை நவீனப்படுத்துவதற்கும் பெருந்தொகை செலவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top