செய்திகள்

கண்டி போக்குவரத்து திட்டத்தை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை

maithri gunaratne

கண்டி நகரில் புதிய போக்குவரத்து முறையை எந்த தடைகள் வந்தாலும் இடைநிறுத்தப் போவதில்லை என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன கூறியுள்ளார்.

கண்டி நகரின் போக்குவரத்துப் பிரச்சினை சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சுமார் ஒன்றரை மாதமாக அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை செய்து வாகனப் போக்குவரத்து திட்டமொன்று தயாரிக்கப்பட்டதாகவும், திட்டத்திற்கு அமைய தனக்கு கிடைக்கப் பெற்ற அறிக்கையின் படி எடுக்கப்பட்ட அந்த செயற்பாடு நூற்றுக்கு தொன்னூறு வீதம் வெற்றியானது என்றும் ஆளுநர் மைத்திரி குணரத்ன கூறியுள்ளார்.

இதற்கு எதிராக சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்வதாகவும், எந்த ஆர்ப்பாட்டங்களை செய்தாலும் இந்த திட்டத்தை ஒருபோதும் தான் நிறுத்தப் போவதில்லை என்றும் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன கூறியுள்ளார்.

(அ)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top