செய்திகள்

குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டாம்: வசதியற்ற இடங்களுக்கு லொறிகள்:

paddy

நெல் கொள்வனவு நாடு பூராகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக நெல் கொள்வனவு சபையின் தலைவர் கஸ்தூரிஅனுராதநாயக்க தெரிவித்துள்ளார்.

 

நெல்கொள்வனவு சபையின் சகல களஞ்சியசாலைகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. களஞ்சியாலை வசதியற்ற பிரதேசங்களை இனம் கண்டு, லொறிகன் மூலம் நெல்லை கொள்னவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.  ஒரு கிலோ சம்பா நெல் 41 ரூபாவாகவும் நாடு ஒரு கிலோ 31 ரூபாவாகவும் அரசாங்கம் விலை நிர்ணயித்துள்ளது.

அந்த விலைக்கு நெல் கொள்வனவு சபை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்கின்றது. குறித்த நிர்ணய விலையை விட குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தடுக்குமாறு தலைவர் விவசாயிகளை கேட்டுக் கொண்ட்டுள்ளார், தமிழ், சிங்கள புத்தாண்டுககான இரு தினங்கள் மற்றும் ஞாயிறு தினங்கள் தவிர்ந்த ஏனைய தினங்களில் மே மாதம் வரையில் நெல் கொள்வனவு இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்தசனிக்கிழமை வரை 25 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(அ.த.தி)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top