செய்திகள்

க. பொ. த. (சா. தர) பரீட்சை: தேசிய அடையாள அட்டை விண்ணப்பம் மார்ச் 31 வரை:

nic for o.l students

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கு ஏக காலத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கப்படுமென்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

இதற்காக விண்ணப்பங்கள் தற்போது பொறுப்பேற்கப்படுகின்றன. மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னர், விண்ணப்பங்களை கையளிக்குமாறு பாடசாலை அதிபர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மாணவர்கள் இதற்கான புகைப்படத்தை திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றை இணையத்தளத்தின் மூலமாக சமர்ப்பிக்க முடியும்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் செய்முறைப் பரீட்சை முன்னதாக நடத்தப்படும் என்பதனால், தேசிய அடையாள அட்டை முன்கூட்டியே பெற்றுக்கொள்வதற்கு மாணவர்கள் இது வசதியாக அமையும். கடந்த வருடத்தில் இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்ததாகவும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். 15 வயதைப் பூர்த்தி செய்தவர்களுக்குத் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top