செய்திகள்

சகல பாடசாலைகளும் மறுசீரமைக்கப்படும்

ranil 2

தொழில்நுட்ப ரீதியில் அபிவிருத்தி அடைந்த நாடுகளே உலகளாவிய ரீதியில் முன்நிலை வகிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற சென் போல்ஸ் மகளிர் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்தகொண்டு உரையாற்றிய பிரதமர் புதிய நவீன தொழில்நுட்பங்களுடன் பணியாற்றுவதற்கான தொழிற்பயிற்சி நெறிகளை வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப அறிவுடன கூடிய ஆளணியே நாட்டுக்கு தேவையென தெரிவித்த பிரதமர் நாட்டில் உள்ள சகல பாடசாலைகளும் மறுசீரமைக்கப்படும். தற்போது சகல துறைகளும் நவீன தொழில்நுட்பங்களுடன் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த தொழில்நுடப் வசதிகள் பாடசாலை மட்டத்தில் இருந்து கட் டியெழுப்பப்பட வேண்டும். அப்போது மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும்போது நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதற்கு இலகுவாக அமையும் தெற்காசியாவின் நவீன கல்வி முறைகளை முன்னெடுப்பதற்கு தாம்; எதிரி;பார்த்துள்ளதாகவும் என்றும் குறிப்பிட்டார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top