செய்திகள்

சா.தர பெறுபேறு மீள் மதிப்பீடு தொடர்பான பூரண விபரம் (மும்மொழிகளிலும் பூரண விபரம் இணைப்பு)

examination department

நேற்று வெளியான 2018 ஆம் ஆண்டிற்குரிய க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பரீட்சார்த்திகள் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுத் தபாலில் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெறுபேற்று மீளாய்வின்போது குறித்த விடைத்தாள் பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்கள் பலரால் முழுமையாக பரிசீலிக்கப்படும். விடைத்தாள் மீளாய்வின் பெறுபேறாக புள்ளிகளில் அல்லது கிடைக்கப் பெற்றுள்ள தரங்களில் அதிகரித்தலோ அல்லது குறைவடைதலோ ஏற்பட இடமுண்டு என்பதை பரீட்சார்த்திகள் அறிந்திருக்கவேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் தயாரிக்கும் போது பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.

01. பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை குறித்த அதிபரூடாகவும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களைத் தாமே பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.
02. விண்ணப்பப்படிவங்கள் மாதிரி விண்ணப்பப்படிவத்தின்படியே தயாரிக்கப்படல் வேண்டும்.
03. ஒரு பாடம் மீளாய்வு செய்வதற்கான கட்டணம் ரூபா 200 ஆகும். உரிய கட்டணத்தைத் தபாற் காரியாலயம்
அல்லது உப தபாற் காரியாலயத்தில் செலுத்திப் பெறப்படும் பற்றுச் சீட்டின ; மூலப்பிரதியை
விண்ணப ;பப்படிவத்தின் மறுபக்கத்தில் கழராதவாறு சரியாக ஒட்டி அனுப்புதல் வேண்டும்.

பூரண விபரங்களையும் விண்ணப்பத்தையும் மும்மொழிகளில் பெற இங்கே கிளிக் செய்க.

o.l 2018 results re-correction

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top