செய்திகள்

சுகாதார அமைச்சின் சேவைகளுக்கு பாராட்டுக்கள்

parliament 2

சுகாதாரம் போசாக்கு சுதேச மருத்துவம் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் உலர்வலய அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி இன்று விவாதம் இடம்பெறுகிறது.

மருந்து வகைகளின் விலைகளை குறைக்கவும் இலவச கண் வில்லைகளை வழங்கவும் சுகாதார அமைச்சு எடுத்த நடவடிக்கைகள் பாராளுமன்றத்தில் பாராட்டப்பட்டுள்ளன.
27 வகை மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும் என்று விவாதத்தில் கலந்து கொண்டஅமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். வைத்தியர்களின் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் புதிதாக மருத்துவப் பீடங்களும் அமைக்கப்படவிருக்கின்றன. அரசாங்கம் 700 சுதேச வைத்தியர்களை சேவையில் இணைத்திருக்கிறது. 2016ஆம் ஆண்டு முதல் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருக்கிறது. மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டமையினால் அரசாங்கத்திற்கு வருடாந்தம் ஒன்பது பில்லியன் ரூபா இலாபம் கிடைக்கிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தேசிய ஒளடத அதிகாரசபை சட்ட மூலத்தை நிறைவேற்றி, மருந்து வகைகளின் விலைகளை குறைப்பதற்கான முயற்சி சாதகமான நடவடிக்கையாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நோயாளர்களுக்கான கண் வில்லைகளையும் மாரடைப்பு நோயாளர்களுக்கான ஸ்டென்ஸையும் இலவசமாக வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர் பாராட்டியுள்ளார். தாய்சேய் மரணமும் குறைவடைந்திருக்கிறதென அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் அவர் உரையாற்றினார்.

சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி 94 சதவீத வளர்ச்சியை அடைந்திருப்பதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சந்ராணி பண்டார தெரிவித்தார். சிறுவர் மற்றும் மகளிர் துறைகளுக்கென பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சிறுவர் துஷ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்தார். பிரதேச வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top