செய்திகள்

சைட்டம் மாணவர்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர் – ஹிருணிகா

hirunika premachandra

‘தனியார் வைத்தியத் துறையில் பட்டம் பெற்ற பல மாணவிகள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்ய முடியாமல் நிர்க்கதியான நிலையில் இருக்கின்றனர். என குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சைட்டம் கல்லூரியில் பட்டம் பெற்ற காரணத்தினாலே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இவர்களை பதிவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியும் ஆதரவளித்து வருகின்றார் என்றும் தெரிவித்தார். அத்துடன் உயர் தரத்தில் எனது பெறுபேறுகள் போதுமானதாக இல்லாத காரணத்தினால் சட்டக்கல்லூரியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் வெளிநாட்டு பல்கலைக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன். அதனால் எமது பணம் வெளிநாட்டுக்கு சென்றது.

ஆனால் இந்த மாணவர்கள் எமது நாட்டிலே படித்து பட்டம் பெற்றுள்ளனர். அதனால் எமது அந்நியச் செலாவணி பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. எனவே இந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என மேலும் தெரிவித்தார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top