செய்திகள்

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மேலும் 4 வழக்குகளில் இருந்து விடுதலை

johnston fernando 2

பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 4 வழக்குகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மீளப்பெற்றுக் கொண்டது.

இதனை தொடர்ந்து குறித்த 4 வழக்குகளில் இருந்தும் அவரை விடுதலை செய்வதாக நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (19) குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்குகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக அவற்றை மீளப்பெற்றுக் கொள்வதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தனர்.

அதனடிப்படையில் குறித்த வழக்குகளை மீளப்பெற்றுக்கொள்ள பிரதான நீதவான் அனுமதி வழங்கியதுடன் பிரதிவாதியான ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். (அ)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top