செய்திகள்

திரிபீடகத்தை யுனெஸ்கோ அமைப்பின் மரபுரிமை சொத்தாக பிரகடனம் செய்யுமாறு கோரும் நிகழ்வு கண்டியில்

thiripidaga

திரிபீடகத்தை உலக மரபுரிமை சொத்தாக பிரகடனம் செய்யுமாறு சகல பௌத்த நாடுகளினதும் ஒத்துழைப்போடுஇ இலங்கை யுனெஸ்கோ அமைப்பிடம் யோசனையை முன்மொழியும் தேசிய நிகழ்வு கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்றுஇடம்பெறவுள்ளது.

மூன்று நிக்காயாக்களின் மஹாநாயக்கர்களும் இதில் பங்கேற்கவிருக்கிறார்கள். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நிகழ்வில் அதிதியாக கலந்து கொள்வார். 2500 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் மஹா சங்கத்தினர் பாதுகாத்து வந்த தேரவாத பௌத்த சமயத்தை எதிர்கால சந்ததியினருக்காக வழங்கும் நோக்குடன் திரிபீடகம் தேசிய மரபுரிமை சொத்தாக கடந்த ஜனவரி மாதம் 5ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வை முன்னிட்டு கடந்த மார்ச் 16 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதி ‘திரிபீடகாபிவந்தனா’ வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு சமய நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

திரிபீடகத்தின் மகிமை பற்றியும் ஆன்மீகத்துடன் கூடிய சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் பௌத்த தத்துவம் பற்றியும் பாடசாலை பிள்ளைகளுக்கும் மக்களுக்கும் தெளிவூட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு சமய கிரியைகளும் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top