செய்திகள்

நாளை முதல் புதிய ரயில் சேவை:

matara beliatta railway

மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையான ரெயில் பாதை நாளை திறக்கப்பட உள்ளது.

இதனுடன் தொடர்புடைய பிலதுவ, வெஹரஹேன, கெக்குணதுற, வம்பருந்த, வெவுறுகன்னல மற்றும் பெலியத்த ரயில் நிலையங்களும் திறந்து வைக்கப்பட உள்ளன.இததொடர்பான நிகழ்வில் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்

27 கிலோ மீற்றர் தூரம் கொண்டதாகும் புதிய ரயில் பாதையில் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் ரெயில்கள் பயணிக்க முடியும். அத்துடன் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் இந்தப் பாதையில் பயணிக்கும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாத்தறை – பெலியத்த ரெயில் நிகழ்ச்சித் வேலைத்திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் பிரியந்த தீகல தெரிவித்துள்ளார்.

மாத்தறை – பெலியத்த ரயில் பாதையின் முதலாவது ரயில் பயணம் நாளை 9.00 மணிக்கு மாத்தறை ரெயில் நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.00 மணியிலிருந்து நேரசூசிக்கு அமைய ரயில் போக்குவரத்து இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாளை முற்பகல் 9 மணிக்கு இடம்பெறும் முதல் பயணத்தில் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top