செய்திகள்

நிபந்தனையின்றி உடன்பட்ட மைத்திரி – ரணில்

maithri and ranil

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கையெழுத்தை போலியான முறையில் பதிவு செய்து ஊடகங்களுக்கு ஆவணங்களை சமர்ப்பித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கை நிபந்தனைகள் ஏதும் இன்றி குறுக்கு வழிமுறையின் மூலம் முடித்துக் கொள்வதற்கு ஜனாதிபதி – பிரதமர் ஆகியோர் தமது உடன்பாட்டை உயர் நீதிமன்றத்துக்கு இன்று (04) தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே, இந்த வழக்கை முடித்துக் கொள்வதற்கு தினம் ஒன்றை அறிவிக்குமாறு மனுதாரர்களினால்  நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சம்பந்தமாக திஸ்ஸ அத்தநாயக்க மன்னிப்புக் கோருவதாயின், வழக்கை குறுகிய வழிமுறையின் மூலம் முடித்துக் கொள்ள ஜனாதிபதி-பிரதமர் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

dc.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top