செய்திகள்

நேயர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்

slbc

நேயர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக இலங்கை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் மாலக்க தல்வத்த தெரிவித்துள்ளார்.

கூட்டுத்தாபனத்தின் ஆளணி வளங்களுக்கு மத்தியில் சவால்களை வெற்றிக்கொள்வது சிரமமான காரியம் அல்ல என்றும் அவர் கூறினார். கூட்டுத்தாபனத்தின் குமாரதுங்க கலையகத்தில் இன்று இடம்பெற்ற பணிக்குழுவினருடனான சந்திப்பில் அவர் உரையாற்றினார். நேயர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படவிருக்கின்றன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடக நிறுவனங்களுக்கு மத்தியில் முன்னணி வகிப்பதாக அவர் கூறினார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சவால்களை இனங்கண்டு வெற்றிகரமான முறையில் அவற்றிற்கு தீர்வு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நெருக்கடிகளையும், சவால்களையும் இலகுவான முறையில் வெற்றிக்கொள்ளமுடியும் என்று கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஹெரல்ட் சேனாதீர தெரிவித்தார். இதற்காக சகல ஊழியர்களினதும் ஒத்துழைப்பும், அர்ப்பணிப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அண்மைக்கால வரலாற்றில் நியமிக்கப்பட்ட வயது குறைந்த தலைவராக மாலக்க தல்வத்தவை குறிப்பிடமுடியும் என்று கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஏரானந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார். கூட்டுத்தாபனம் எதிர்நோக்கியுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள அனைத்து ஊழியர்களும் இணைந்து செயற்படவேண்டும் என்றும் பணிப்பாளர்நாயகம் கூறினார். கூட்டுத்தாபனத்தின் சுபீட்சத்திற்காக புதிய தலைவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து ஊழியர்களும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என கூட்டுத்தாபனத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் சுஜீவ சம்பத் தெரிவித்தார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top