செய்திகள்

பட்டதாரி ஒருவரும் அலுகோசு நேர்முகப் பரீட்சையில் பங்கேற்பு

thooku kayiru

அலுகோசுவன் பதவிக்கு இன்று (02) நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் பட்டதாரி ஒருவரும் கலந்துகொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இன்றைய நேர்முகப் பரீட்சைக்கு 39 விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டிருந்த போதிலும் 19 பேர் மாத்திரமே சமூகமளித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு வருகை தந்திருந்த சகலரும் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் க.பொ.த. உயர்தரம் சித்தியடைந்தவர்கள் எனவும் சிறைச்சாலைகள் உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இந்தப் பதவிக்கான ஆகக் குறைந்த தகுதியாக க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 6 பாடங்கள் சித்தியடைந்திருத்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நாளை (03) நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு 40 விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

dc.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top