செய்திகள்

பலர் பயனடையும் என்டர்பிரைஸ் சிறீ லங்காவின் நடமாடும் சேவை

mangala samaraweera

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் நடமாடும் சேவைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது.

 பட்டதாரிகள் குழுவொன்று இந்தக் கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. நேற்று முன்தினமும், நேற்றும், மாத்தறை – வெலிகமவில் இடம்பெற்ற நடமாடும் சேவைகளில் ஆறாயிரத்து 200ற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த நடமாடும் சேவைகள் மூலம் குறிப்பிடத்தக்கப் பயன்களைப் பெற்றுக் கொண்டதாக 77 வீதத்தினர் தெரிவித்துள்ளனர்.

thumbnail 1

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் 40 பட்டதாரிகள் கடன் உதவிகளுக்காக விண்ணப்பித்துள்ளனர் என்று அந்தக் கருத்துக் கணிப்புத் தெரிவிக்கிறது. இதுவரை 42 செயற்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றின் அறிக்கைகள் உரிய நிதி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

thumbnail 3

 

சுற்றுலாத்துறையில் சுயவேலைவாய்ப்பை மேற்கொள்வதற்காக 450 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை இடம்பெற்ற நடமாடும் சேவை குறித்த மீளாய்வுக் கூட்டமொன்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் விரைவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

thumbnail 4

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top