A/L

பல்கலைக்கழக அனுமதி : திறக்க காத்திருக்கும் கதவுகள்

2015/2016-ம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுத் தகுதியை தீர்மானிக்கும் Z-புள்ளிகள்  வெளியாகியுள்ள இவ்வேளையில், பல்கலைகழக அனுமதிக்கான அதி குறைந்த தகைமைகள் இருந்தும் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி காரணமாக சந்தர்ப்பம் தவறியோருக்கு இலங்கை கல்வி முறைமை வழங்கும் இன்னுமொரு அதிசிறந்த மாற்று வாய்ப்பு(Alternative Opportunity) பற்றியதோர்  அறிவுறுத்தலை வழங்கும் நோக்கோடு இப்பதிவு எழுதப்படுகிறது.

எதிர்காலம் பற்றிய பலத்த எதிர்பார்ப்புக்களோடும் பல வண்ணக்கனவுகளோடும் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள்  விண்ணப்பித்த போதும், மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் காரணமாக அதியுச்ச போட்டிக்கு மத்தியில் குறிப்பிட்ட தொகையினரே சந்தர்ப்பத்தை பெற்றுக் கொள்கின்றனர்.

ஆனால், சந்தர்ப்பம் கிடைக்காதோரும் பல்கலைக்கழகங்களுக்கு நிகரான/அண்மிய கல்வியையும் அனுபவத்தையும் பெற்றிடும் வகையில் இலங்கை கல்விமுறைமையில் 1995-ம் ஆண்டு உதயமாகியது தான் “இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம்(SLIATE)“.

இங்கு முற்றிலும் இலவசமாக நடைமுறையுலகில் அபிவிருத்தியடைந்து வரும் துறைசார் கற்கை நெறிகளுடன்(Information Technology, Engineering, Food Technology, Tourism and Hospitality Management,  Quantity Survey, Accountancy, Business Administration, Business Finance, English, Agriculture) அத்துறைசார் தொழிற் பயிற்சியும்(Industrial Training) வழங்கப்படுகிறது. இது தவிர பல்கலைக்கழக மாணவர்களுக்கு காணப்படும் மஹபொல புலமைபரிசில் உட்பட ஏனைய நன்மைகளும் வழங்கப்படுகின்றன.

இக் கற்கைநெறிகளை பொறுத்தவரை HND தராதரத்தை பெற்றுத்தரும் என்பதோடு குறித்த  துறையில் இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் காணப்படும் தெரிவுசெய்யப்பட்ட  External Degree-க்களின் அல்லது தெரிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழக Degree-க்களின் இறுதியாண்டினை மாத்திரம் பூர்த்தி செய்வதினூடாக குறித்த துறைசார் Degree ஒன்றை  பெற்றுக்கொள்ளவும் சந்தரப்பத்தினை வழங்குகின்றது.

மேலும், இங்குள்ள சில விஷேட துறைகளில்(Information Technology) இங்கு பெறும் HND உடன் இரண்டு வருட துறைசார் வேலை அனுபவத்தையும்(Working Experience) பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு, நேரடியாக Postgraduate Degree-க்களுக்கு பதிவு செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக அனுமதி கிடைக்காவிட்டாலும் மாணவர்கள் தம் அடுத்த கட்ட நகர்வை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கான பல்வேறு வாய்ப்புக்களை இலங்கை கல்வி முறைமை இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்கிறது. அதில் மிகச்சிறந்த அதியுயர் மாற்று வாய்ப்பாகவே SLIATE காணப்படுகிறது.

ஆனால், இது தொடர்பில் மாணவர்கள் பலருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படாததன் காரணமாக சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுதவிர இன்னும் பல சிறப்பு வாய்ப்புக்களும் வழிமுறைகளும் தாராளமாகவே இலங்கை கல்வி முறைமையில் காணப்படுகின்றன. பதிவு நீண்டுவிட்டதால் அவை பற்றி இன்னுமொரு பதிவில் பார்ப்போம்.

குறிப்பு: SLIATE இற்கான அனுமதி மற்றும் கற்கைநெறி  தொடர்பான விபரங்கள்(Admission & Course Details)  எதிர்வரும் நாட்களில் அரச வர்த்தமானியில்(Gazette) எதிர்பார்க்கலாம்.

 

கற்கை நெறிகள் சார்ந்த தகவல்களை உங்களது  தொலைபேசியில் பெற F (இடைவௌி) @infokandy என டைப்  செய்து 40404 எனும் இலக்கத்துக்கு எஸ்.எம்.எஸ் செய்யவும்

By: M.J. Abdul Basith 
[abasith250@gmail.com]

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top