செய்திகள்

பாகிஸ்தான் நகரங்களுக்கான விமான சேவைகள் இரத்து

sri lankan airlines logo

பாகிஸ்தான் கராச்சி மற்றும் லாஹூர் நகரங்களுக்கு நாளை (28) இடம்பெறவுள்ள விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளது இதன காரணமாகஇ இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

கராச்சி மற்றும் லாஹூர் நகரங்களுக்கு நாளை செல்வதற்காக விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்தோர்இ தங்களது பிரயாண முகவர்களிடம் அல்லது இணையத்தளத்தில் இதுதொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தங்களது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விடயமாக இருந்தபோதிலும்இ பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
காஸ்மிரில் காணப்படும் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் இடம்பெற்றுவரும் போர்ச் சூழல் காரணமாகஇ ஜம்மு காஸ்மிர்இ பஞ்சாப் மற்றும் ஹிமாசல் பிரதேசங்களுக்கு உரித்தான 8 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகஇ இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
அம்ரித்சார்இ ஜம்முஇ ஸ்ரீநகர்இ லேஇ குல்லு மனாலிஇ கங்க்ராஇ சிம்லா மற்றும் பதன்கோட் போன்ற விமான நிலையங்களேஇ இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top