செய்திகள்

புத்தாண்டில் இடம்பெற்ற விபத்துகளினால் 413 பேர் வைத்தியசாலையில்

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் புத்தாண்டு பிறப்புடன் இடம்பெற்ற திடீர் விபத்துக்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
நூற்றுக்கு 8 வீதத்தினால் இவ்வாண்டு விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் ஏற்பட்ட விபத்துக்களினால் 413 கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதில் 113 பேர் வீதி விபத்துக்கள் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 6% ஆல் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடுகளில் ஏற்பட்ட விபத்துக்களினால் 49 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 22% ஆல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வருடம் தீ விபத்து காரணமாக 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அது கடந்த ஒருவர் மட்டுமே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top