செய்திகள்

புல்மோட்டை கனிய மணல் தனியார் துறையினருக்கு வழங்கப்படமாட்டாது

lanka mineral sand

புல்மோட்டை கனிய மணல் பகுதி தனியார் துறையினருக்கு வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரங்கள் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் அவர் கூறினார். பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து உரையாற்றினார். வில்பத்து சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் அமைச்சர் நிராகரித்தார்.

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனாந்தரப்பகுதி பற்றி ஆராய்வதற்கென ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறினார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top