செய்திகள்

மத்தி மாகாணத்தில் 350 வைத்தியர் பற்றாக்குறை – ஆளுநர்

maithri gunaratne

மத்திய மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் மே மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என்று அந்த மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன இன்று நோர்வூட் பிரதேச மக்களை சந்தித்தார்..thumbnail 3

இச்சந்திப்பில் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர்கள்இ அரச அதிகாரிகள் மற்றும் நோர்வூட் பிரதேச மக்கள் இக்கலந்துரையாலில் கலந்து கொண்டனர்.thumbnail 3

இதன் போது நோர்வூட் பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகள் பற்றியும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

மத்திய மாகாண ஆளுநர்இ எனக்கு அதிகமான முறைப்பாட்டு கடிதங்கள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து இவ்விஜயத்தை மேற்கொண்டதாக ஆளுநர் கூறினார்.

இங்கு தெரிவித்த முறைப்பாடுகளில் ஒன்றான காணிப்பத்திரம் வழங்கப்படாமை தொடர்பில் கிராம உத்தியோத்தரிடம் கேட்டபோது ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் இதற்கான தீர்வை வழங்குவதாக குறிப்பிட்டார்.thumbnail 4
அத்துடன் அம்பகமுவ பிரதேச செயலாளருடன் இதைப்பற்றி கலந்துரையாடி இதனை துரித கதியில் வழங்க ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் நோர்வூட் பாடசாலையில் நிலவி வந்த இடப்பற்றாக்குறையை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. எனவே இதற்கான தீர்வை இன்னும் இரு மாதத்திற்குள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

நான் ஆளுநராக பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் பார்வையிட்ட இடங்களில் நோர்வூட் பிரதேசம் சிறந்த முறையில் உள்ளது. ஏனென்றால் இங்கு சகல வசதிகளுடன் கிளங்கன் வைத்தியசாலை காணப்படுகின்றது.

ஆனால் இங்கு வைத்தியர் மற்றும் தாதியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இப்பிரச்சினை இங்கு மற்றும் அல்ல நாட்டில் சகல பிரதேசங்களிலும் காணப்படுகின்றது. இதில் மத்திய மாகாணத்தில் 350 வைத்தியர்களுக்கான பற்றாக்குறை காணப்படுகின்றது என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top