செய்திகள்

வரவு – செலவு திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

budget 2019.jpg 2

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் 45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று மாலை இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top