செய்திகள்

வருத்தம் தெரி­வித்­தது மலேசியா

flag11

கைதா­ன ஐவ­ரும் விளக்­க­ம­றி­யலில்
மலே­சி­யா­வுக்­கான இலங்கை உயர்­ ஸ்தா­னிகர் இப்­ராஹிம் அன்சார் மீது கோலா­லம்­பூர் விமான நிலையத்தில் நடத்­தப்­பட்ட தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் அந்­நாட்­டு அர­சாங்கம் தனது வருத்­தத்தை தெரி­வித்­துள்­ள­துடன் இவ்­வா­றான சம்­ப­வங்கள் எதிர்­­கா­லத்தில் இடம்பெ­றாத வகையில் ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும் எனவும் உறு­தி­யளித்­துள்­ள­து.

இது தொடர்பில் மலே­சிய அர­சாங்கம் நேற்று முன்­தினம் வெளியிட்­டுள்ள உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வா­று தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­து.

” இந்தத் தாக்­கு­தல்­களில் இலங்கை உயர்ஸ்­தா­னிகர் சிறிய காயங்­க­ளுக்­குட்­பட்­டுள்ளார். இதனால் பாதிக்­கப்­பட்­டுள்ள இலங்கை உயர்­ ஸ்தா­னிகர் இப்­ராஹிம் அன்சாருக்கு மலே­சிய அர­சாங்கம் தனது அனு­தா­பத்தை தெரி­வித்துக் கொள்­கி­றது.

இது குறித்து மலே­சிய அதி­கா­ரிகள் முழு­மை­யான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வார்கள் என்­ற உறு­தி­மொ­ழி­யையும் அளிக்­கி­ற­து.

மலே­சிய வெளிவி­வ­கார அமைச்சு கோலா­லம்­பூ­ரி­லுள்ள இலங்கை உயர் ஸ்தா­னி­க­ரா­ல­யத்­துடன் இணைந்து எதி­ர்­கா­லத்தில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­றாத வகையில் தேவை­யான நட­வ­­டிக்­கை­களை எடுக்­க­வுள்­ளது” என்றும் அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையில் இலங்கை உயர்­ ஸ்தா­னிகர் இப்­ராஹிம் அன்சார் மீது தாக்­குதல் நடத்­திய சந்­தே­கத்தில் பேரில் கடந்த திங்கட் கிழமை கைது செய்­யப்­பட்ட ஐ­வ­ரையும் இன்று புதன் கிழமை வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கோலா­லம்பூர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

மலேசி­யா­வுக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த அமைச்சர் தயா கம­கேயை இலங்­கைக்கு வழி­ய­னுப்பும் பொருட்டு கோலா­லம்­பூர் விமான நிலை­யத்­­திற்குச் சென்ற சமயமே இலங்கை உயர்­ ஸ்தா­னிகர் இப்­ராஹிம் அன்சாரை வழி­ம­றித்த ஒரு குழு­வினர் அவர் மீது பலத்த தாக்­கு­தலை நடத்­தி­யி­ருந்­த­மை குறிப்­பி­டத்­தக்­க­து.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top