செய்திகள்

விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்களுக்கு விரைவில் நியமனம்

akilaviraj kariyawasam

விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்கள் 3,850 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் விளையாட்டுத் துறையில் திறமை காட்டிய பாடசாலை மாணவ மாணவியருக்கு வர்ண விருது அளிக்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். நேற்று கொழும்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் மே மாதம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறையில் திறமை சாலிகளை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய கல்வி அமைச்சர், தற்போதைய பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில் தேசிய பாடசாலை விளையாட்டு விழாவை அறிமுகப்படுத்திய விதத்தை நினைவுகூர்ந்தார். இதன் மூலம் திறமையான போட்டியாளர்கள் உருவானார்கள். கிராமப்புற திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டது என அவர் மேலும் கூறினார்.

வர்ண விருது வழங்கும் விழா மைலோ அனுசரணையில் இடமபெற்றது. கடந்த 25 வருடங்களாகப் பாடசாலை அபிவிருத்திக்கு ஆற்றிய சேவைகளுக்காக நெஸ்லே நிறுவனத்தின் உப தலைவர் பந்துல எகொடகே நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

dc.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top