சர்வதேசம்

வைரலாக பரவுகிறது வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தின் போலி புகைப்படங்கள்

damage plane

இந்திய விமானப்படை தாக்குதலுக்கு எதிர்வினையாக புதன்கிழமை இரண்டு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது.

ஒரு விமானம் பாகிஸ்தான் பகுதியில் வீழ்ந்ததாகவும், ஒரு விமானி தங்களது கட்டுப்பாட்டில் உள்ளார் என்றும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் கூறியுள்ளார்.

நேற்று பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் இந்தியா துரிதமாக செயல்பட்டு பதிலடி கொடுத்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது பிப்ரவரி 14ஆம் தேதி ஒரு ஆயுதக் குழு தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இதில் 40 படையினர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்தே இரு தரப்புக்கும் இடையில் பதற்றம் அதிகரித்தது.

பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியதை அடுத்து #Pakistaniarmyzindabad, #Pakistanairforceourpride and #Pakistanstrikesback உள்ளிட்ட ஹாஷ்டாகுகள் பாகிஸ்தானில் டிரெண்ட் ஆகின.

விமான தாக்குதல் நடந்ததாக கூறப்படும் செய்தியை பாகிஸ்தான் தொலைக்காட்சி ஊடகங்கள், இணையதளங்கள் மிக விரிவாக வெளியிட்டன. நொடிக்கு நொடி அது குறித்த தகவல்களையும் புதுப்பித்துக் கொண்டே இருந்தன.

பாகிஸ்தான் ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படங்கள்படத்தின் காப்புரிமைTWITTER

இந்திய விமானங்கள் அழிக்கப்பட்டதாக பகிரப்படம் பல புகைப்படங்கள், காணொளிகளும் பகிரப்பட்டு வருகின்றன.

இது குறித்து பிபிசி மேற்கொண்ட ஆய்வில் அந்த புகைப்படங்களில் பெரும்பாலானவை போலியானவை என்று தெரியவந்துள்ளது.

காயமடைந்த இந்திய விமானியின் காணொளி

இந்திய விமானி ஒருவர் தரையில் கிடப்பது போல காட்டும் ஒரு காணொளி காட்சியை சில பாகிஸ்தானி டிவிட்டர் பயனர்கள் பகிர்ந்தனர். அந்த காணொளியில், அவரின் முகத்தில் ரத்தமும், காயமும் இருந்தன. அவர் உயிருடன் இருந்தார்.

பாகிஸ்தான் படைகள் இந்திய விமானியை கைது செய்ததற்கு சாட்சியாக அந்த காணொளி காட்சி பகிரப்பட்டது.

அவர் இந்திய விமானப்படை விமானிதான். ஆனால், அந்த பகுதி பாகிஸ்தான் பகுதி அல்ல. படத்தில் இருப்பவர் விமானப்படை கமாண்டர் விஜய் ஷேக்லே. பிப்ரவரி 19, 2009 அன்று பெங்களூருவில் அவரின் சூர்யகிரண் விமானம் விபத்திற்குள்ளானதில் அவர் காயம் அடைந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது.

அவரை காப்பாற்ற உள்ளூர் இளைஞர் ஒருவர் விரைகிறார். அவரது கரங்களைபற்றி ஆசுவாசப்படுத்துகிறார். யாரை தொடர்பு கொள்ள வேண்டுமென்று வினவுகிறார். அந்த விமானி அந்த பதிலளிக்கிறார். தனது உடலில் வேறேதும் காயங்கள் இருக்கிறதா என பார்க்க சொல்கிறார்.

குவிண்ட் இணையதளம் இது குறித்து விரிவான கட்டுரையை வெளியிட்டு இருக்கிறது. அந்த விமானி மற்றும் அவருக்கு உதவிய இளைஞர் குறித்து விவரித்தது அந்த செய்தி.

முதல் புகைப்படம்

விபத்துக்குள்ளான இந்திய விமானப் படையின் புகைப்படம் பாகிஸ்தானி சமூக ஊடகங்களிலும், பாகிஸ்தான் செய்தி ஊடகங்களிலும் நூற்றுக்கணக்கான முறை பகிரப்பட்டது.

விமானத்தின் வால் பகுதி அப்படியே உள்ளபோது, அந்த விமானத்தின் முகப்பு பகுதி முற்றிலும் சேதம் அடைந்திருந்தது.

அந்த புகைப்படத்தை பகிர்ந்து பாகிஸ்தான் இந்தியாவை பழி தீர்த்ததிற்கு இந்த புகைப்படம்தான் சாட்சி என டிவிட்டரில் பதிவுகள் வெளியாயின.

அந்த விமானம் நிச்சயம் இந்திய விமானப்படை விமானம்தான். ஆனால் அதற்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 2015ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி இந்திய அதி நவீன ஜெட் பயிற்சி விமானம் ஒடிசா மாநில மயூர்பஞ்ச் மாநிலத்தில் விபத்துக்குள்ளானது. அதன் புகைப்படம்தான் இது.

இரண்டாவது புகைப்படம்

இந்திய விமானப் படை விமானம் கட்டடத்தை மோதியது போல ஒரு புகைப்படமும் பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

ஆனால், இந்த புகைப்படத்திற்கும் பாகிஸ்தானிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி ராஜஸ்தான் மாநில ஜோத்பூரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இந்திய பாதுகாப்பு படையின் மிக் 27 ரக விமானம் மோதியது. அதன் புகைப்படம்தான் இது.

BBC.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top