செய்திகள்

02.04.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

cabinet

02.04.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்:

01. தேசிய தொழில் கல்வி நிறுவனம் மற்றும் சீனாவின் சென்க்டோன் வெளிநாட்டு வர்த்தக தொழில் கல்வி கல்லூரிக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 8ஆவது விடயம்)

தேசிய மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் மூலம் கல்வி திட்டங்களை முன்;னெடுக்கும் தேசிய தொழில் கல்வி நிறுவனம் தொழில் படையணிக்குள் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தி சேவையில் ஈடுபட்டுள்ளோரக்கு டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கை நெறி செயலமர்வுகளை நடத்துதல் மற்றும் அவை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்கின்றது. சர்வதேச வர்த்தக கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு கற்கை நெறிகளை நடத்தும் சீனாவின் சென்க்டோன் வெளிநாட்டு வர்த்தக தொழில் பயிற்சி கல்லூரி நிவாரண அடிப்படையில் தேசிய தொழில் கல்வி நிறுவனத்தின் மாணவர்களுக்கு குறுகிய கால கற்கை நெறிகளை நடத்துவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமவாக குழுக்கள் ரீதியில் மாணவர்களை தெரிவு செய்து வெளிநாட்டு பயிற்சி கற்கை நெறிகளை நிவாரண அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. ஆபத்தான மருந்துகளை கட்டுப்படுத்தும் தேசிய சபையின் உணவட்டுன சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையம் அமைந்துள்ள காணியை அந்த சபைக்கு உரிமை மாற்றீடு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 10ஆவது விடயம்)

காலி உணவட்டுன பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆபத்தான மருந்துகளை கட்டுப்படுத்தும் தேசிய சபையின் புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் மூலம் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்காக சிறப்பான தங்குமிட வசதிகளுடனான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அதன் மூலம் புனர்வாழ்வு அளிக்கப்படும் நபர்கள் சிறந்த பிரஜைகளாக சமூகமயப்படுத்தப்படுகின்றனர். 1990ஆம் ஆண்டில் சமூக சிகிச்சை முகாமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிலையம் 1991ஆம் ஆண்டிலிருந்து தங்கியிருந்து சிகிச்சை பெறும் மத்திய நிலையமாக நடத்தப்பட்டு வருகின்றது. 35 பயனாளிகள் ஒரே முறையில் தங்கியிருந்து சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான இந்த மத்திய நிலையத்தில் சேவைகள் வழங்கப்பட்ட போதிலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் 50இற்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் பட்டியலில் இருந்து வருகின்றனர். இந்த மத்திய நிலையம் அமைந்துள்ள காணி சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சுக்கு உரியதாவதுடன் இந்த மத்திய நிலையத்தின் சேவைகளுக்காக நிலவும் கோரிக்கையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் புதிய கட்டிடங்களை நிர்மாணிக்க கூடிய வசதி இல்லை இதன் காரணமாக ஆபத்தான மருந்துகளை கட்டுப்படுத்தும் தேசிய சபையின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ள காணியை அந்த சபைக்கு உரிமை மாற்றீடு செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தில் முக்கிய சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் ஒழுங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 11ஆவது விடயம்)

உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களின் குடியிருப்புக்களுக்கு மாற்று காணியை பெற்றுக்கெடுக்கும் வரையில் இந்த குடியிருப்பாளர்களுக்காக வழங்கப்படும் மாதாந்த வீட்டு வாடகை கொடுப்பனவை நீடிப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக இந்த திட்டத்தின் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை மீளுக்குடியமர்த்துவதற்காக பண்டாரவளை பிரதேசத்தில் அடையாளங் காணப்பட்டுள்ள காணிகளில் குறிப்பிடப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் வரையில் இவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுக்கான வாடகை கொடுப்பனவை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. இலங்கையில் பைனர்ஸ் வன உற்பத்தி விசேட தேசிய உற்பத்திகளுடன் உற்பத்தி வனமாக பரிமாற்றுவதற்காக வனபேண்தகு முகாமைத்துவம் மற்றும் புனரமைப்பு தொடர்பான ஆசிய பசுபிக் வலைப்பின்னலுடன் புரிந்துணர்வு உடன்பாட்டை எட்டுதல் (நிகழ்ச்சி நிரலில் 12ஆவது விடயம்)

பைனர்ஸ் உற்பத்திக்கு அருகாமையில் தேசிய தாவர விசேட உற்பத்தியின் மூலம் தாவரவியல் வனமாக மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நீர் வளமுள்ள பிரதேசங்களில் உள்ள வன உற்பத்திகளில் மண் மற்றும் நீர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் உயிரியல் பல்வகைத் தன்மையைக் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்காக பெற்றுக் கொள்ளக்கூடிய பங்களிப்பை கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளதுடன் இலங்கையில் தற்பொழுது உள்ள பைனர்ஸ் வன உற்பத்தி தேசிய தாவரங்களைக் கொண்டதான வன உற்பத்தியாக பரிமாற்றவதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் வனத்துறை பேண்தகு முகாமைத்துவம் மற்றும் புனரமைப்பு தொடர்பான ஆசிய பசுபிக் வலைப்பின்னல் மூலம் வழங்கப்படும் கொடுப்பனவின் கீழ் 3 வருட கால வரையறுக்குள் நடைமுறைப்படுத்துவதற்காக அந்த நிறுவனத்தடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. உள்ளுரில் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துதல் (நிகழ்ச்சி நிரலில் 13ஆவது விடயம்)

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நிலவிய மோதல்கள் காரணமாக 25 நலன்புரி முகாம்களில் உள்ளுரில் இடம்பெயர்ந்த 577 குடும்பங்கள் தொடர்ந்தும் முகாம்களில் வாழ்க்கையை கழித்து வருகின்றனர். இவர்களுள் 381குடும்பங்கள் காணிகளை இழந்த குடும்பங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன. அப்படி இருந்த போதிலும் யாழ்ப்பாண பிரதேசத்தில் அரச காணி போதுமளவு இல்லாததன் காரணமாக இவர்களை மீளக்குடியமர்த்துவதற்காக அரசாங்கத்தினால் காணிகளை ஒதுக்கீடு செய்வது பாரிய பிரச்சினையாக இருந்து வருகின்றது இதனால் இந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்குத் தேவையான காணியை மதிப்பீட்டாளர்களின் மதிப்பீட்டுக்கு அமைய தனியார் உரிமையாளர்களிடம் கொள்வனவு செய்வதற்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீளக்குடியமர்த்தல் மற்றும் புனர்வாழ்வு மற்றும் வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. 2000ஆம் ஆண்டு இலக்கம் 43 இன் கீழான காப்புறுதி தொழிற்துறையை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 20ஆவத விடயம்)

இலங்கை காப்புறுதி சபையை அமைத்தல் மற்றும் காப்புறுதி வர்த்தகமாக உணரப்பட்ட தொழில் மட்டத்தில் முன்னெடுப்பதை உறுதி செய்வதன் மூலம் காப்புறதிக்கு பங்களிப்பு செய்வோரின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் இலங்கையில் காப்புறுதி வர்த்தக அபிவிருத்தி கண்காணிப்பு மற்றும் ஒழுங்குறுத்தலுக்காக 2000ஆம் ஆண்டு இல 43 இன் கீழான காப்புறுதி தொழிற்துறையை முறையாக முன்னெடுப்பதற்கான சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் காப்பீட்டாளரால் இலங்கை காப்புறுதி ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின் குழுவிற்கு வருடாந்தம் கட்டணம் செலுத்துதல் தொடர்பாக ஒழுங்குவிதிகள் உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள 2104ஃ9 இலக்க 2018.12.31ஆம் திகதி வர்த்தமானியை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கென நிதியமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07.மக்கள் வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை அதிகரிப்பதற்கான திருத்த சட்ட மூலத்திற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 22ஆவது விடயம்)

இரண்டாம் நிலை ஒழுங்குவிதி மூலதன தேவைக்காக கடன் பத்திரங்களை வழங்கும் பொழுது மக்கள் வங்கிக்கு அரசாங்கத்தினால் பிணை இன்றி கடன்பத்திரங்களை வழங்குவதற்கான அதிகாரம் கிடைக்கும் வகையில் மற்றும் மக்கள் வங்கியின் தற்போதைய அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனமான ரூபா 1 பில்லியன் பங்கு மூலதனங்களை 50 பில்லியன் வரையில் அதிகரிக்கும் நோக்கில் 1961ஆம் ஆண்டு இலக்கம் 29இன் கீழான மக்கள் வங்கிச் சட்டத்தில் சில சரத்துக்களை திருத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன் அதனை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்பிப்பதற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. சார்க் கைவினைத் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கான மத்திய நிலையத்தை இலங்கையில் அமைத்தல் நிகழ்ச்சி நிரலில் 31ஆவது விடயம்)

சார்க் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை அனைத்து அங்கத்துவ நாட்டிலும் சார்க் அபிவிருத்தி நிலையத்தில் ஒத்துழைப்புடன் கைப்பணி கிராமங்களை அமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சார்க் வலயத்தில் குறைந்த வருமானத்தைக் கொண்ட பயனாளிகளான கலைஞர்களின் சேமநலன்களை மேம்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த வேவைலத்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான திட்ட அறிக்கைக்கு அமைய இலங்கையில் சார்க் கைப்பணி தொழிற்துறை அபவிருத்தி மத்திய நிலையமாக தேசிய சில்ப சபை கொண்டுள்ள பொல்கொல்ல கைவினைத் தொழிற்துறை அபிவிருத்தி மத்திய நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக சார்க் அபிவிருத்தி நிதியத்தின் ஒத்துழைப்புடன் சார்க் கைப்பணி தொழிற்துறை மத்திய நிலையத்தை அமைப்பதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் நீண்ட காலமாக இடம்பெயர்ந்த நபர்களை மீளக்குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதின் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. விவசாய வீடமைப்புக் குழுவை மறுசீரமைத்தல் நிகழ்ச்சி நிரலில் 37ஆவது விடயம்)

செமட செவன என்ற அனைவருக்கும் நிழல் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் முறையான வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்டம் பிரதேசம் மற்றும் விவசாய வீட்டுக்குழுக்களை ஸ்தாபிப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக இதுவரையில் 11 192 பிரிவுகளில் விவசாய வீடமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் அடைவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நோக்கத்தை பயனுள்ள வகையில் நிறைவேற்றுவதற்காக கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திற்கு அப்பால் துணை கிராம மட்டத்தில் விவசாய வீடமைப்பக் குழுக்களை அமைப்பதற்கும் இந்த வீடமைப்புக் குழுக்கள் சமூக குடியிருப்புக் குழுக்கள் என்ற ரீதியில் பெயரிட்டு நாட்டின் அனைத்து துணை கிராமங்களிலும் சமூக குடியிருப்புக் குழுக்களை அமைப்பதற்கு வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. சர்வதேச சமுத்திர அமைப்பின் (TMO) இணக்கப்பாட்டிற்கு அமைவாக 1971ஆம் ஆண்டு இலக்கம் 51இன் கீழான வர்த்தக கப்பல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 43ஆவது விடயம்)

சர்வதேச சமுத்திர அமைப்பு (TMO) அமைப்பினால் அடிப்படை சாசன பிரகடனமாக முன்னெடுக்கப்பட்டுள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச சாசனங்களுக்கு அமைவாக அதன் அங்கத்துவ நாடு என்ற ரீதியில் செயல்பட வேண்டியுள்ளது. இதற்கமைவாக சர்வதேச சமுத்திர அமைப்பின் சாசனத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்டத்தை முன்னெடுப்பதற்காக இலங்கையின் வர்த்தக கப்பல் நடவடிக்கைகள் மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட 1971ஆம் ஆண்டு இலக்கம் 52 இன் கீழான வர்;த்தக கப்பல் சட்டத்தை திருத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை அரசாங்கத்தின் அதி விசேட வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதன் பின்னர் அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் துறைமுகங்கங்கள் மற்றும் கப்பல் அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. அகுரேகொட பாதுகாப்பு இராணுவத் தலைமையகத்தை நிர்மாணிக்கும் திட்டத்தில் 8 கட்டிடத் தொகுதிகளுக்காக காற்றோட்ட இயந்திரங்கள் மற்றும் குளிரூட்டல் கட்டமைப்பை விநியோகித்தல் மற்றும் ஸ்தாபித்தல் (நிகழ்ச்சி நிரலில் 5ஆவத விடயம்)

அகுரேகொட பாதுகாப்பு இராணுவத் தலைமையகத்தை நிர்மாணிக்கும் திட்டத் தொகுதியில் 8 கட்டிடங்களுக்கு காற்றோட்ட இயந்திரங்கள் மற்றும் குளிரூட்டல் கட்டமைப்பை விநியோகித்தல் மற்றும் ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய M/S Frigi Engineerring Service (Pvt.) Ltd. என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. களனி பல்கலைக்கழகத்தில் பாலி மற்றும் பௌத்த கல்வி முதுகலை நிறுவனத்திற்காக 5 மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியொன்றை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 48ஆவத விடயம்)
1975ஆம் ஆண்டில் களனி பல்லைக்கழகத்துடன் இணைந்ததாக ஆரம்பிக்கப்பட்ட பாலி மற்றும் பௌத்தக் கல்வி முதுகலை நிறுவனத்திற்காக பொதுமான இடவசதிகளை ஏற்படுத்தும் பொருட்டு 4 மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது கட்டத்தின் கீழ் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைவாக 393 மில்லியன் ரூபாவிற்கு வரையறுக்கப்பட்ட சதுட பில்டர்ஸ் தனியார் நிறவனத்திற்கு வழங்குவதற்காக நகரத் திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுகாதார பாதுகாப்பு விஞ்ஞான பீடத்திற்கான கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 49ஆவது விடயம்)

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுகாதார பாதுகாப்பு விஞ்ஞான பீடத்திற்கான கட்டிடத் தொகுதி அராபி பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் நிதி உதவியுடன் 7 978 மில்லியன் ரூபா மொத்த முதலீட்டின்; கீழ் மட்டக்களப்பு பிள்ளையார் அடி பிரதேசத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 2887.95 மில்லியன் ரூபாவிற்கு வட்டியற்ற தொகைக்கு வரையறுக்கப்பட்ட இன்டர் நெஷனல் கன்ஸ்ரக்ஷன் கன்சோடியம் என்ற தனியார் நிறவனத்திற்கு வழங்குவதற்காக நகரத் திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் நிறுவனத்திற்காக 48 அறைகளைக்கொண்ட ஹோட்டல் ஒன்றை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 51ஆவது விடயம்)

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் தற்பொழுது நடத்தப்படும் பகுதியில் 48 அறைகளைக் கொண்ட நவீன சிறிய சொகுசு ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைய 1288.7 மில்லியன் ரூபாவிற்கு வரையறுக்கப்பட்ட பில்டர்ஸ் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. பேலியகொடையில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானத்தைக் கொண்டவர்களுக்கான வீடுகள் வழங்குவதற்கான திட்டத்திற்கு தேவையான காணியை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 52ஆவத விடயம்)

190 பில்லியன் ரூபா முதலீட்டுடன் கொழும்பு நகரத்தில் குறைந்த வசதிகளைக் கொண்ட வீடுகளில் வாழும் சமூகத்தினருக்கு வீடுகளை வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் நகர புனரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டத்தில் 16 திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் 8380 குடும்பங்கள் இந்த வீடுகளில் குடியமர்த்தப்பட்டிருக்கின்றனர். இதன் 2 ஆவது கட்டத்தின் கீழ் 7400 வீட்டு அலகுகளைக் கொண்ட 12 திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பேலியகொடை பிரதேசத்தில் 600 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்படும் காணியை மிகவும் சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வதற்காகவும் கால்வாய்களை சீர் செய்து மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு 217.34 மில்லியன் ரூபா நிதியில் இவ்வாறான பணிகளை மேற்கொள்வது தொடர்பில் ஆற்றல்களை வெளிப்படுத்தும் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்வதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. முந்தெனி ஆறு அபிவிருத்தி திட்டத்திற்காக சர்வதேச ஆலோசனை சேவையைப் பெற்றக்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 53ஆவத விடயம்)

35 500 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள முந்தெனி ஆறுக்கருகாமையில் ஆன அபிவிருத்தி திட்டத்தின் மூலம் கீழ் மாகாணத்தில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 13 200 ஹெக்டர் காணிக்கு நீர்பாசன வதிகளை வழங்குதல், குடி நீரை விநியோகித்தல், வெள்ளத்தை தடுத்தல் ஆகிய நோக்கங்களுடன் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதனை நடைமுறைப்படுத்தவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்காக அனுபவம் மற்றும் ஆற்றல் மிக்க ஆலோசகர் ஒருவரை தெரிவு செய்வதற்கு உள்நாட்டு வெளிநாட்டு ஆலோசனை நிறுவனத்திடம் பரிந்துரைகளை கோருவதற்கும் இந்த பரிந்துரைகளை மதிப்பீடு செய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனைப் பெறுகைக் குழுவொன்றை நியமிப்பதற்கு விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. அம்பாறை தீகவாவி நினைவுச் சின்னத்தை புனரமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 56ஆவது விடயம்)

சத்தாதிஸ்ஸ மன்னரினால் நிர்மாணிக்கப்பட்ட 1947ஆம் ஆண்டின் பாதுகாப்பு நினைவுச் சின்னமாக பிரகடனப்படுத்தப்பட்ட அம்பாறை தீகவாபி நினைவுச் சின்னத்தை புனரமைத்தல் பணிகளுக்குத் தேவையான விசேட வகையிலான செங்கல்களை விநியோகித்தல் மற்றும் புனரமைப்பு பணிகளுக்குத் தேவையான தொழில் பங்களிப்பை இலங்கை இராணவத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக வீடமைப்பு நிர்மாண கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. மஹாவ தொடக்கம் ஓமந்தை வரையிலான ரயில் பாதையை புனரமைத்தல் நிகழ்ச்சி நிரலில் 59ஆவது விடயம்)

வடமாகாணத்திற்கு செயல்திறன் பாதூப்பு மற்றும் சிறந்த பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்துகளை மேற்கொள்ளும் எதிர்பார்ப்புடன் மணித்தியாலயத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்துடன் ரயிலை செலுத்துவதற்கும் ஆகக் கூடுதலான எடைகளை தாங்கக் கூடிய ரயில் பாதையொன்றை நிர்மாணிப்பதற்காக மஹாவையில் இருந்து ஓமந்தை வரையில் 128 கிலோமீற்றர் நீளத்துடனான ரயில் பாதையை இந்திய நிதியுதவி ஒத்துழைப்புடன் புனரமைப்பதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கு அமைவாக இந்த பாதையை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழுவின் சிபாரிசுக்கமைய 91.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு M/s Ircon International Ltd. நிறவனத்திற்கு வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. இந்துமா சமுத்திரம்: எமது எதிர்கால வரையறைக்கும் அமைச்சர்கள் மாநாட்டை 2019 இல் நடத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 61ஆவத விடயம்)

எதிர்காலத்தில் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி கேந்திரமாவதற்கு இந்துமா சமுத்திரத்தினால் ஆற்றல் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக சமூத்திர நாடுகளினதும் முக்கிய கடற்படையை பயன்படுத்துவோரின் நன்மைக்காக இந்துமா சமுத்திரத்தில் பயணிக்கும் சுதந்திரத்தை வலுவூட்டுவதற்காக இந்து சமூத்திரத்தின் சமாதானம் என்ற தொனிப்பொருளின் கீழ் அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகரில் மகாநாடு நடைபெற்றதுடன் இந்துமா சமுத்திரம் எமது எதிர்காலம் என்று வரையறுக்கப்பட்ட தொனிப்பொருளின் கீழ் இந்துமா சமுத்திரத்தின் கரையோர நாடுகள் மற்றும் இணக்கப்பாட்டு பயன்பாட்டின் 40 நாடுகளின் சிரேஷ்ட பிரதிநிதிகளின் மாநாடு கொழும்பில் நடத்தப்பட்டது.

கொழும்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் பரிந்துரைக்கப்பட்ட வகையில் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் உலகளாவிய சமுத்திர குற்றச்செயல் தடுப்பு நிகழ்ச்சியுடன் ஒன்றிணைந்து இந்துமா சமுத்திரத்தை வரையறுப்போம் என்ற தொனிப்கொருளில் 2019ஆம் ஆண்டு மத்தியகால பகுதியில் சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டம் மற்றும் அமைச்சர்களான மகாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு கௌரவ பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன்ன அவர்களும் கூட்டாக சமரப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20.என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியை அநுராதப்புரத்திலும் யாழப்;பாணத்திலும் நடத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 68ஆவது விடயம்)

நாடு முழுவதிலும் புதிய ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி அதனூடாக தேசிய உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தின் முதலாவது கண்காட்சி மொனராகலையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அத்தோடு அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டின் தொலைநோக்கின் கீழ் அதன் 2ஆவது கண்காட்சி அநுராதபுரத்திலும் 3ஆவது கண்காட்சி யாழ்பாணத்திலும் இந்த வருடத்தில் நடத்தப்படவுள்ளது. அநுராதப்புரத்தில் மே மாதத்திலும் ஜுலை மாதத்தில் யாழ்ப்பாணத்தில் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி தனியார் துறையின் அனுசரனையின் கீழ் நடத்துவதற்காக நிதியமையச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top