முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ரகர் வீரர் வசிம் தாஜூதின் மரணம் தொடர்பில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி தாஜூதின் மர்மமான முறையில் மரணித்திருந்தார்.
முன்னதாக வாகன விபத்து என தாஜூதின் மரணம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
எனினும் தற்பொது இந்த சம்பவம் கொலை என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரிலேயே பிரதிப்பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுர சேனாநாயக்கவை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
