A/L

இஸ்லாமியப் பணியுடனான வைத்திய சேவையே எனது இலட்சியம்: மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்ற அஸ்மா.

a.l result

இஸ்லாமியப் பணியுடனான வைத்திய சேவையே எனது இலட்சியமாகும் என உயிரியல் விஞ்ஞான பிரிவில் கண்டி மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற செல்வி. அஸ்மா தெரிவித்துள்ளார்.
கண்டி, உலப்பனை பிரதேசத்தில் வசிக்கும் அஸ்மா, அஷ்ஷெய்க். எம். எச். நிலவ்பர் (இஸ்லாஹி) திருமதி. எம். ஏ. மெஹருபான் (இஸ்லாஹி) ஆகியோரின் மூத்த புதல்வியாவார். உலப்பனை இக்ரா மு.ம.வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றும் அஷ்ஷெய்க் எம்.எச். நிலவ்பர் (இஸ்லாஹி) அவர்கள் நாடறிந்த இஸ்லாமிய பணியாளரும் ஆவார். தனது தாய், தந்தை இருவரினதும் இஸ்லாமியப் பணி, சமூகப் பணி என்பனவே, தனது வெற்றிக்கான அல்லாஹ்வின் அருளைத் தந்திருக்கும் என உணர்வுபூர்வமாகத் தெரிவித்தார் அஸ்மா.
வைத்திய துறையில் எப்பிரிவை செய்ய வேண்டும் என இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரிவித்த அஸ்மா எதைச் செய்தாலும் Dr. ரயீஸ் ஐப் போன்று இஸ்லாமியப் பணியுடனான சேவையாகவே இருக்க வேண்டும் என்பதே தனது இலட்சியம் என்றார்.
தரம் 1 முதல் சா. தரம் வரை உலப்பனை இக்ரா மு.ம. வித்தியாலயத்தில் கற்ற அஸ்மா உயர் தரத்தை கம்பளை ஸாஹிரா தேசிய பாடசாலையில் பயின்றார். தனது வெற்றிக்கான காரணங்களைக் குறிப்பிடும் போது முதற்கண் அல்லாஹ்வின் அருள் அடுத்து பெற்றோர், உறவினர்கள், கற்றுத் தந்த ஆசிரியர்கள் என எல்லோரையும் நினைவுபடுத்தினார்.
முதற்கண் அல்லாஹ்வுக்கும் அடுத்து பெற்றோர், ஆசிரியர்களான திருமதி. ஹனி, திரு. காதர் அலி, திருமதி சியானா, திருமதி ரஸீனா போன்ற பலருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்த அஸ்மா தனது தந்தையின் இளைய சகோதரர் (சாச்சா) முஹம்மத் ரியாஸ் என்பவரை விஷேடமாக நினைவுபடுத்தினார்.
3A எடுப்பதே எனது இலக்காக இருந்தது. ஆனால் இதை விட உங்களால் சாதிக்கலாம். ஏன் தேசிய மட்டம் வரை செல்லலாம். அதற்கான திறமை இருக்கிறது என்று அடிக்கடி என்னை உற்சாகப்படுத்துவார் எனது சாச்சா. அவரது ஊக்குவிப்புதான் சிறந்த பெறுபேறு என்பதையும் தாண்டி மாவட்ட முதல் நிலைக்கு வர முக்கிய காரணம் எனலாம். அவர் எனக்கு சிறந்த ஒரு Motivator. அவரை இந்த சந்தர்ப்பத்தில் விஷேடமாக ஞாபகப்படுத்தி நன்றிகளையும் தெரிவிக்கிறேன் என்றார் அஸ்மா.
மேலதி வகுப்புக்களுக்கு பெரிதாகச் செல்லவில்லை அதுவும் இரண்டாம் வருடத்தில் ஒரு பாடத்திற்கு மட்டுமே சென்றேன். ஆசிரியர்கள் எவ்வளவு கற்பித்தாலும் எமது சுய கற்றல் மிக முக்கியம். சுய நம்பிக்கையும் வேண்டும். ஆசிரியர் கற்பிக்கும்போதே மிக அவதானமாக உள்வாங்கிக்கொள்வது மிக மிக இன்றியமையாதது என தனது வெற்றிகரமான கற்றல் பற்றிக் கூறும் போது தெரிவித்தார் அஸ்மா.

இப்படிப்பட்ட பெபேறு வந்தது உலப்பனை வரலாற்றிலும் முதற் தடவையாகும். இச்சாதனையுடன் சேர்த்து உலப்பனையும் உச்சரிக்கப்படும் என்பது மறுக்க முடியாது.
பிள்ளையின் சாதனையால் பெற்றோர்க்கு பெருமை. ஆனால் தனது வெற்றிக்கு பெற்றோரின் பணியை முக்கியமாக ஞாபகப்படுத்தும் பிள்ளையின் மனப் பக்குவம். சிறந்த பிள்ளை வளர்ப்பினால் வாழ்க்கையில் கிடைக்கும் உன்னதமான விலைமதிப்பற்ற தருணங்களுள் இதுவும் ஒன்று.
புலமைப் பரிசில் சித்தி, சா. தரத்தில் 9 A, பல்வேறு போட்டிகளில் தேசிய மட்டத்தில் முதலிடம், உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாவட்ட மட்ட முதல் நிலை என்று சாதனைப் பட்டியலைத் தொடரும் அஸ்மா மென்மேலும் பல சாதனைகளைப் படைத்து சமூகத்திற்கும் நாட்டிற்கும் சிறந்த சேவையை வழங்கி இலட்சியப் பயணத்தைத் தொடர WWW. Serandibenews.com மனமாற வாழ்த்துகிறது.

– முஹம்மத் சர்ஜதீன்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top