செய்திகள்

பணிப் பகிஷ்கரிப்பு ஒரு வாரத்தை எட்டியது

estate strike

1000 ரூபாய் சம்பள கோரி கொட்டகலை, டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள் இன்று (11) கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

7 வது நாளாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்படும் இவர்கள் இன்று கோஷங்களை எழுப்பியவாறு, பதாதைகளை ஏந்திய வண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை சுமார் ஒரு மணித்தியாலம் நடத்தினர்.

உரிய முறையில் முதலாளிமார் சம்மேளனத்துடன், தொழிற்சங்கங்கள் பேச்சுவாரத்தை நடத்தி ஜனவரி மாதத்திற்கு முன்பதாக தோட்ட தொழிலாளர்களுக்கு இம்முறை நியாயமான சம்பளத்தினை பெற்று தரவேண்டும் எனவும், எங்களுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்று தரவேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்பாட்டத்தின் போது சுமார் 350 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top