சர்வதேசம்

புட்டினின் இரண்டாவது திருமணம்?

viladimir putin

நான் ஒரு மதிப்பிற்குரிய நபரை திருமணம் செய்ய இருக்கிறேன்’’ என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவர் யார் என்ற தகவலை வெளியிட புட்டின் மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அண்மையில் மொஸ்கோவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் 2 ஆவது திருமணம் குறித்து கேள்வி எழுப்பியபோதே புட்டின் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கடந்த 1983 ஆம் ஆண்டு லியுத்மிலா புதினா என்பவரை திருமணம் செய்தார். அப்போது அவர் விமான பணிப்பெண்ணாக இருந்தார்.

இவர்களுக்கு மரியா (32). கத்ரீனா (35) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் முடிந்து 31 ஆண்டுகளுக்கு பிறகு புட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு தனது மனைவி லியுத்மிலாவை விவாகரத்து செய்தார்.

இதற்கிடையே புட்டினுக்கும், ரஷ்ய முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (34) என்பவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இருப்பினும், புட்டின் அதனை மறுத்துள்ளார். அலினா 3 வயதில் இருந்தே ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றவர். இவள் ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்க பதக்கங்களை வென்று இருக்கிறார். 2 தடவை உலக சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top