சர்வதேசம்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை: இடத்தை மாற்றுமாறு தலிபான் கோரிக்கை:

thaliban

சவூதி அரே­பி­யாவில் நடத்­து­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்ள அமெ­ரிக்­கா­வு­ட­னான பேச்­சு­வார்த்­தையில் தலி­பான்கள் பங்­கு­பற்ற மாட்­டார்கள், பேச்­சு­வார்த்­தைக்­கான இடம் கட்­டா­ருக்கு மாற்­றப்­பட வேண்டும் என கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தலிபான் அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். பேச்­சு­வார்த்­தையில் ஆப்­கா­னிஸ்தான் அர­சாங்­கத்தை உள்­ளெ­டுக்­கு­மாறு சவூதி அர­சாங்­கத்­தினால் அழுத்­தங்கள் முன்­வைக்­கப்­ப­டு­வதைத் தவிர்ப்­ப­தற்கே இந் நட­வ­டிக்­கை­யாகும்.

ஆப்­கா­னிஸ்­தானில் 17 ஆண்­டு­க­ளாக இடம்­பெற்று வரும் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வரு­வதை நோக்­காகக் கொண்டு நான்­கா­வது சுற்­றாக நடை­பெ­ற­வுள்ள இப் பேச்­சு­வார்த்தை 2019 இல் வெளி­நாட்டுப் படை­களை வெளி­யேற்­று­வ­தற்கும் சாத்­தி­ய­மான யுத்த நிறுத்­தத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் தலிபான் அமைப்­பிற்கும் அமெ­ரிக்­காவின் விசேட பிர­தி­நிதி ஸல்மே காலில்ஸாட் இற்கும் இடையே நடை­பெ­ற­வுள்­ளது.

பேச்­சு­வார்த்தை மேசையில் மேற்கு நாடு­களின் ஆத­ரவைப் பெற்ற ஆப்­கா­னிஸ்தான் அர­சாங்­கத்தின் பிர­சன்­னமும் இருக்க வேண்டும் என சர்­வ­தேச அழுத்­தங்கள் அதி­க­ரித்து வரு­கின்ற போதிலும், காபூல் அர­சாங்­கத்தின் நேரடிப் பேச்­சு­வார்த்­தைக்­கான முன்­மொ­ழி­வினை கடும்­போக்கு இஸ்­லா­மியக் கிளர்ச்­சிக்­குழுத் தலை­வர்கள் நிரா­க­ரித்­துள்­ளனர்.

அடுத்த வாரம் றியாதில் அமெ­ரிக்க அதி­கா­ரி­களை சந்­தித்து கடந்த மாதம் அபு­தா­பியில் நிறைவு செய்­யப்­ப­டா­துள்ள எமது சமா­தான முன்­னெ­டுப்­புக்­களை தொடர விருந்தோம் என தன்னை அடை­யா­ளப்­ப­டுத்த விரும்­பாத ஆப்­கா­னிஸ்­தானை தள­மாகக் கொண்ட உயர்­மட்ட தலிபான் உறுப்­பி­ன­ரொ­ருவர் தெரி­வித்தார்.

பிரச்­சினை என்­ன­வென்றால் சவூதி அரே­பி­யாவும், ஐக்­கிய அரபு அமீ­ர­கமும் ஆப்­கா­னிஸ்தான் அர­சாங்கத் தூதுக்­கு­ழு­வினை கட்­டா­ய­மாக சந்­திக்­கு­மாறு கோரு­கின்­றன. தற்­போ­தைக்கு அது எம்மால் முடி­யா­ம­லி­ருப்­பதால் நாம் சுவூதி அரே­பி­யாவில் நடை­பெற வேண்­டிய சந்­திப்­பினை இரத்துச் செய்­துள்ளோம் எனவும் அவர் தெரி­வித்தார்.

சவூதி அரே­பி­யாவில் நடை­பெ­ற­வி­ருந்த பேச்­சு­வார்த்­தை­யினை தலிபான் இரத்துச் செய்­த­தாக அறி­வித்த தலிபான் பேச்­சாளர் ஸபீ­ஹுல்லாஹ் முஜாஹிட் அக் குழு புதிய பேச்­சு­வார்த்­தைக்­கான இடம் தொடர்பில் எவ்­வித கருத்­துக்­க­ளையும் வெளி­யி­ட­வில்லை எனவும் தெரி­வித்தார்.

இது தொடர்பில் ஆப்­கா­னிஸ்­தா­னி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் எவ்­வித கருத்­துக்­க­ளையும் வெளி­யி­ட­வில்லை.

இந்தக் கட்­டத்தில் ஆப்­கா­னிஸ்தான் அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்த முடி­யாது என்­பதை சவூதி அரே­பியத் தூத­ர­கத்­திற்கு விளக்­கி­யுள்­ள­தாக மற்­று­மொரு உயர்­மட்ட தலிபான் உறுப்­பினர் தெரி­வித்தார்.h

ஆப்­கா­னிஸ்தான் அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை அமெ­ரிக்கப் படை­யி­னரும் அதன் கூட்டுப் படையும் ஆப்­கா­னிஸ்­தானில் இருக்க வேண்டும், வெளி­யே­றி­விடக் கூடாது என விரும்­பு­கின்­றது. ஆனால் நாம் வெளி­நாட்டுப் படை­களை நாட்­டி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்கு பெரும் விலை­யினைச் செலுத்­தி­யுள்ளோம் என்­பது அனை­வரும் அறிந்த உண்­மை­யாகும் எனவும் அவர் தெரி­வித்தார்.

நாம் ஏன் ஆப்­கா­னிஸ்தான் அர­சாங்­கத்­துடன் பேச வேண்டும்? ஆப்­கா­னிஸ்தான் யுத்­தத்தில் அமெ­ரிக்­கா­வையே பிர­தான எதி­ரி­யாக தலிபான் பார்க்­கின்­றது. எனவே ஆப்­கா­னிஸ்தான் அர­சாங்­கத்­துடன் பேசு­வ­தற்கு முன்­ன­தாக வெளி­நாட்டுப் படை­களை திருப்­பி­ய­னுப்­பு­வ­தற்கு சட்­ட­பூர்­வ­மாக வொசிங்­­ட­னு­ட­னேயே பேச வேண்டும் என்­பதே தலி­பானின் நிலைப்­பா­டாகும் எனவும் அவர் தெரி­வித்தார்

இரா­ணுவப் படை­யெ­டுப்பின் மூலம், அமெ­ரிக்­காவின் மிக நீண்­ட­காலம் புரி­யப்­படும் யுத்­த­மாக ஆப்­கா­னிஸ்தான் யுத்தம் காணப்­ப­டு­கின்­றது. கோடிக்­கா­ணக்­கான அமெ­ரிக்க டொலர்கள் செல­வா­கி­யி­ருப்­ப­தோடு இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பிறந்த அமெரிக்க இராஜதந்திரியான காலில்ஸாட்டை கடந்த வருடம் ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகள் சந்தித்ததைத் தொடர்ந்து முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்தன. யுத்தத்தில் ஈடுபடும் தரப்புக்களைச் சேர்ந்த அதிகாரிகள் குறைந்தது மூன்று தடவைகள் சந்தித்துக் கொண்ட போதிலும், யுத்தம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
-Vidivelli

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top