செய்திகள்

ஆற்றில் மூழ்கிய மாணவன்: நாவலப்பிட்டியில் சம்பவம்:

student in nawalapitiya river

நாவலபிட்டி, மஹாவெளி கங்கையில் நீராட சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் முழ்கி பலியாகியுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றதாக நாவலபிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஐந்த நண்பர்கள் மஹாவெளி கங்கையில் நீராட சென்ற போது அதில் மூன்று பேரை நீர் அள்ளுண்டு சென்றுள்ளது. இதன்போது அயலில் மேசன் தொழில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒருவர் மூவரையும் காப்பாற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேலை அதில் ஒரு மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது வழியில் உயிர் இழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கினிகத்தேன மத்திய மாகா வித்தியாளயத்தில் உயர் தரத்தில் கல்வி பயிலும் 18 வயதுடைய நாவலபிட்டி, அப்புகஸ்தலாவ பகுதியை சேர்ந்த விதுரசஞ்கன இளங்கோகோன் என்ற சிறுவனே இவ்வாறு உயிர் இழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிர் இழந்த மாணவனின் சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு சட்டவைத்திய அதிகாரியின் மரண விசாரனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபடும் என பொலிஸார் மேலும் தெரிவத்தனர்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top