செய்திகள்

கடல் கடந்த நாடுகளில் இலங்கையின் நாமத்தை வலுவூட்டுமாறு அமைச்சர் மாரபன வலியுறுத்தல்

thilak marappana

பொது இராஜதந்திரத்தினை வினைத்திறனாக கையாள்வதனூடாக கடல்கடந்த நாடுகளில் இலங்கையின் நாமத்தை வலுவூட்டுமாறு இலங்கை இராஜதந்திரிகளை வெளிநாட்டு அமைச்சர் மாரபன வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகத்தர்களது பொது இராஜதந்திரம் மற்றும் ஊடக உறவுகள் தொடர்பான திறமைகளை வலுவூட்டும் நோக்கில் இலங்கை பத்திரிகை ஸ்தாபானத்துடன் இணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டு வாரங்களாக நடாத்தப்பட்ட பொது இராஜதந்திரம் மற்றும் ஊடக உறவுகள் பயிற்றுவிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வின்போது (11 ஜனவரி) அமைச்சர் மாரபன இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் 2018ம் ஆண்டு உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்களும் அமைச்சில் கடமைபுரியும் நடுத்தர உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

பௌத்தம், இரத்தினக்கற்கள், தேயிலை, வாசனைத்திரவியங்கள், சிறப்பு வாய்ந்த ஏற்றுமதி உற்பத்திகள் மற்றும் இலங்கைக்கே உரித்தான பாரம்பரிய உபசரிப்பு போன்ற இலங்கையின் அடிப்படை சின்னங்களைப் பயன்படுத்தி பொது இராஜதந்திரத்தினை வினைத்திறனாக கையாள்வதனூடாக கடல்கடந்த நாடுகளில் இலங்கையின் நாமத்தை வலுவூட்டுமாறு இலங்கை இராஜதந்திரிகளை வெளிநாட்டு அமைச்சர் மாரபன சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகத்தர்களது பொது இராஜதந்திரம் மற்றும் ஊடக உறவுகள் தொடர்பான திறமைகளை வலுவூட்டும் நோக்கில் இலங்கை பத்திரிகை ஸ்தாபானத்துடன் இணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டு வாரங்களாக நடாத்தப்பட்ட பொது இராஜதந்திரம் மற்றும் ஊடக உறவுகள் பயிற்றுவிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வின்போது வெள்ளிக்கிழமை (11 ஜனவரி) அமைச்சர் மாரபன இக்கருத்துக்களை பரிமாரிக்கொண்டார். இந்நிகழ்வில் 2018ம் ஆண்டு உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்களும் அமைச்சில் கடமைபுரியும் நடுத்தர உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இரண்டு தசாப்த காலங்களில் பொது இராஜதந்திரம் மற்றும் ஊடக உறவுகள் தொடர்பாக தனது உத்தியோகத்தர்களுக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட முதற் பயிற்சிப்பட்டறை இதுவாகும்.
சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பேசும்போது, ஒருவருக்காக மற்றவர் உணர்கின்ற அன்பு நிறைந்தஇ ஏராளமான திறமைகளைப் பெற்ற மனிதர்களைக் கொண்ட ஓர் நாகரிகமடைந்த தேசமாக இலங்கையின் நாமத்தை வெளிநாடுகளில் பரப்புவதன் முக்கியத்துவத்தை வெளிநாட்டமைச்சர் வலியுறுத்திக் கூறினார். ‘இந்தத் தகவல் தெளிவாகவும் உரக்கவும் கொடுக்கப்பட வேண்டும்’ எனவும் தெரிவித்தார். இலங்கை பற்றிய பார்வைகளை மாற்றியமைப்பதிலும் இலங்கையின் நாமத்தை கட்டியெழுப்புகின்ற செயற்பாட்டிலும் இலங்கை இராஜதந்திரிகள் புத்தாக்கத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பொது இராஜதந்திரம் மற்றும் ஊடக உறவுகள் தொடர்பான திறமைகள் மேற்சொன்ன முயற்சிகளுக்கு பெரிதும் பயன்மிக்கதாக அமையும் என்றும் குறித்துக்காட்டினார்.
நிகழ்வில் பேசும்போது, வெளிநாட்டு செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க அவர்கள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பொது இராஜதந்திர செயற்பாடுகளில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது என்றும் இந்த கடுமையான பயிற்சி நெறி வரும் இருபது வருடங்களுக்கு, அரசாங்கத்தின் பொது இராஜதந்திர நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்கு போதுமான பல்வேறு தரங்களிலுள்ள வெளிநாட்டு சேவை உத்தியோகத்தர்களை பயிற்றுவித்திருக்கின்றது என்றும் தெரிவித்தார். ஊடகத்துடனான உறவை கட்டியெழுப்புவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தும்போதுஇ இரு வார பயிற்சி நெறி இராஜதந்திரிகளும் ஊடக சமூகமும் ஒருவரையொருவர் பரஸ்பர தொடர்ந்தேர்ச்சியான புரிந்துணர்வுடன் பழகுவதற்கும் நிலையான ஓர் உறவை கட்டியெழுப்புவதற்கும் வழியமைத்தது என்றும் கூறினார்.
கருத்தியல்கள்இ பொது இராஜதந்திர முறைமைகள், அதன் பரப்புக்கள் மற்றும் தகவல் யுகத்தில் அதன் வகிபங்கு என்பவற்றை பங்குபற்றியவர்கள் புரிந்து கொள்வதற்கு துணைபுரிவதனை நோக்காகக் கொண்ட இந்நிகழ்ச்சி உத்தியோகத்தர்களது வேலைகளில் எதிர்கொள்கின்ற பல்வேறு பொது இராஜதந்திர கருவிகளின் நடைமுறைப் பிரயோகம் தொடர்பாக உத்தியோகத்தர்களை பயிற்றுவிப்பதனை இலக்காகக் கொண்டிருந்தது. மேலும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள், சிறப்புத்தேர்ச்சி கொண்டோர் மற்றும் துறைசார் நிபுணர்களால் நடாத்தப்பட்ட கருத்தியல் ரீதியான விரிவுரைகளையும் உட்பொதிந்திருந்தது. அந்த விரிவுரைகள் பொது இராஜதந்திரத்தின் வரலாறுஇ பொது மக்களின் கருத்துக்களை வடிவமைப்பதில் ஊடகத்தின் வகிபங்குஇ சமூக ஊடகங்கள்இ ஊடகங்களுடன் தொடர்புறுதல் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கேற்ப கருத்துச் சுதந்திரம் போன்ற பரந்த அம்சங்களை உள்ளடக்கியிருந்தன.
ஊடக வெளியீட்டினை தயாரித்தல்இ ஊடக சந்திப்புக்களை நடாத்துதல்இ ஊடக நேர்காணல்களை மேற்கொள்ளுதல்இ சமூக ஊடகங்களை தாக்கம் செலுத்தக் கூடியதாக பயன்படுத்துதல்இ நிகழ்ச்சியில் பங்குபற்றியோருடனான சூடான ஊடக சந்திப்புக்கள்கெமெராவுடனான நேர்காணல்கள் போன்ற பொது இராஜதந்திர நடைமுறை விடயங்கள் தொடர்பாக வெளிநாட்டு ஊடக நிருபர்கள் மற்றும் இராஜதந்திரிகள் உள்ளடங்களாக துறைசார் நிபுணர்கள் மற்றும் சிறப்புத்தேர்ச்சி கொண்டோர்களுடனான அமர்வுகளையும் இந்நிகழ்ச்சி கொண்டிருந்தது. செய்தி அறையின் தொழிற்பாடுகளின் முதல் அனுபவத்தினை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்இ இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் அஸோஸியேடட் நியூஸ் பேபர்ஸ் ஒப் ஸிலோன் லிமிடட்(லேக் ஹவ்ஸ்) ஆகிய இடங்களையும் இடங்களுக்கும் சென்றனர்..
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரகங்களுக்கேற்ப இலங்கை இராஜதந்திரிகள் சிறந்த ஊடக ஊறவுகளை மேற்கொள்வது எவ்வாறு என்றும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அவசியமான ஊடக தேவைகள் தொடர்பாகவும் ஊடகவியலாளர்களுடன் கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள் கலந்துரையாடினர்.
வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் அதன் இணை நிறுவனங்கள் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை ஊடக கல்லூரியின் உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சி நெறியின் வளவாளர்கள் இந்த சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து விருந்துபசாரம் இடம்பெற்றது..

(அ.த.தி)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top