வசதிக்கட்டணம் மற்றும் சேவைக்கட்டணத் தொகையிலும் பார்க்க கூடுதலான தொகையைசட்டவிரோதமாக அறிவிடும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைமேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.கல்விஅமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சின் செயலாளருக்கு இதற்கானஆலோசனைகளை வழங்கியிருப்பதாக இந்த அறிக்கையயயில்
வசதிக்கட்டணம் மற்றும்சேவைக்கட்டணத்தை அறிவிடும்பொழுது இதற்கு தேசிய பாடசாலையாயின் கல்விஅமைச்சின் செயலாளாகள்;, மாகாண பாடசாலையாயின் மாகாணகல்வி செயலாளர்களின்அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வவாறு இல்லாதபட்சத்தில் தமது விருப்பத்திற்கமைவாக சுற்றறிக்கையை மீறிய வகையில் பாடசாலை அதிபர்கள்கட்டணங்களை அறிவிட முடியாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இது தொடர்பானமுறைப்பாடுகளை 1998 என்ற உடனடி தொலைபேசி ஊடாக கல்வி அமைச்சுக்குக்கு பொதுமக்களால்அறிவிக்க முடியும்.
(அ.த.தி)
