செய்திகள்

சேனாவை அழிக்கும் இயற்கை மருந்து: பரீட்சித்துக் காட்டினார் ஆயுர்வேத வைத்தியர்:

sena in nuwaraeliya

சோளம் உட்பட பல்வேறு பயிர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி பாரிய அழிவை ஏற்படுத்தி வரும் சேனா படைப்புழு தொடர்பில் கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வருகின்றமை அறிந்ததே.

இந்நிலையில் சேனாவை அழிப்பதற்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தைக் கொண்டு சேனா படைப் புழுவை அழித்துக் காட்டினார் குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் ராஜஜீவ குமார என்பவர்.
நேற்று (26) அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்திற்கு விஜயம் செய்த குமார தன்னால் தயாரிக்கப்பட்ட மருந்தைக் கொண்டு பரீட்சார்த்தமாக சேனா புழு சிலவற்றை அழித்துக் காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘சுமார் 10 நிமிடங்களில் இவற்றை இல்லாமல் செய்யலாம். தன்னால் தயாரிக்கப்பட்ட மருந்து மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. என்று கூறி அந்த மருந்தை தனது நாக்கில் வைத்தும் காட்டினார்.
இது போன்று பல பிரச்சினைகளுக்கும் இயற்கை முறையில் தன்னால் மருந்து தயாரிக்கலாம் என்றும், அரசு இதற்குரிய உபகரணங்கள் உட்பட ஏனைய வசதிகளை செய்து தரும் பட்சத்தில் தன்னால் முழுமையாக சேனாவிற்கான மருந்தை உற்பத்தி செய்யலாம் என வேண்டுகோள் விடுத்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top