செய்திகள்

நாமலின் முறைப்பாடு: இரசாயண திணைக்களத்திற்கு சென்ற பொலிஸ்மா அதிபர்:

pujitha
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வெளியிடப்பட்ட குரல் பதிவுகள் தொடர்பிலான விசாரணைக்காகவே பொலிஸ் மா அதிபரை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்று காலை 9.30 மணியளவில் அவரை குறித்த திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரை முதற் தடவையாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த கொலைத்திட்டத்துடன் தொடர்புடைய குரல் பதிவுகளில் பொலிஸ் மா அதிபரின் குரல் பதிவும் உள்ளடங்கின்றனவா என விசாரணை செய்வதற்காவே அவர் குறித்த திணைக்களத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.

நாமல் குமாரவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமையவே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top