செய்திகள்

நாளை அரசியலமைப்பு பேரவை கூடுகிறது

parliament

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியலமைப்புச் சபை நாளை காலை 10.30 க்கு பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கும் வழிநடத்தல் குழுவுவிடம் கையளிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

அதேவேளை செயற்குழுவில் சமர்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை, அரசியலமைப்பு பேரவையில் நாளை முன்வைக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களும் இதன்போது கருத்து தெரிவிக்க உள்ளனர் எனவும், அரசமைப்பு பேரவை செயற்பாடுகள் 12.30 மணிவரை இடம்பெறும் எனவும், அதன் பின்னர் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top