செய்திகள்

பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி (வாழ்த்து இணைப்பு)

rahul gandhi

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

திரு.காந்தி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ,இதுதொடர்பாக அரசியல் ரீதியில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையை வெற்றிகொள்வதற்காக இடம்பெற்ற வாக்களிப்பில் பெறப்பட்ட வெற்றி மற்றும் பாராளுமன்றத்தின் இறைமையைப் பாதுகாத்து உயர் நீதிமன்றம் வழங்கிய வழக்குத் தீர்ப்புக் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தொடர்ச்சியாக ஸ்திரமான அரசியல் தன்மை இடம்பெற வேண்டும் என்பதே தமது விருப்பமாகும் என்றும் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதேவேளை குறித்த இந்த வாழ்த்துக் கடிதத்தில் 18-12-2018 என திகதி குறிப்பிடப்பட்டாலும் இலங்கைப் பிரதமர் செயலகத்திற்கு 10-01-2019 திகதியே கிடைக்கப்பபெற்றுள்ளதாக பதிவாகியமை அவதானிக்க முடிகிறது.

rahul gandi letter

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top