செய்திகள்

பெற்றோர்களிடமிருந்து பணம் பெறப்படுவதை தடுக்க நடவடிக்கை

akilaviraj kariyawasam

பாடசாலைகளில் பெற்றோர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்வதை தடுப்பதற்கு உடன் நடவடிக்கை மேற்கொளளுமாறு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெற்றோர்களிடம் இருந்து பாடசாலை நடவடிக்கைகளுக்காக பணம் சேகரிக்கப்படுகின்றதா என்பதைக் கண்டறிவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென தேசிய பாடசாலைகள் தொடர்பில் முறைப்பாடுகளைப் பொறுப்பேற்பதற்காக அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான முறைப்பாடுகளை கே.ஜீ.சீ.மகேஷிக்கா, உதவி கல்விப் பணிப்பாளர், தேசிய பாடசாலைக் கிளை, கல்வியமைச்சு, இசுறுபாய, பத்தரமுல்ல என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கமுடியும்
பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு அண்மையில் இடம்பெற்ற அதிகாரிகளுடான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் இதுதொடர்பாக தெரிவிக்கையில் . பணம் சேகரிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அனைத்து அதிகாரிகளும் செயற்பட வேண்டும். இலவசக் கல்வியின் நன்மைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் பெற்றோர்கள் மீது தேவையில்லாத அழுத்தங்களைக்கொடுக்கும் இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top