செய்திகள்

பொதுத் தேர்தலை முன்னிட்டு IPL தென்னாபிரிக்காவிற்கு மாற்றப்படுமா?

ipl 2019
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் ரி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 சீசன் வெற்றிகரமான முடிவடைந்துள்ளன. 12 வது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர் தென்ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. 2009 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது ஐபிஎல் தொடர் தென்ஆப்பிரிக்காவிலும், 2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டது.

இந்த முறை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முயற்சி செய்து வந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவரான வினோத் ராய் டெல்லியில் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் 23 ஆம் திகதி தொடங்குகிறது. போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

a.d.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top