செய்திகள்

மத்திய வங்கி ஆளுநருடன் வொஷிங்டன் பறந்தார் மங்கள

imf

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் வொஷிங்டன் பயணமானார்.

நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட் மற்றும் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளைச் சந்தித்து இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் இந்த விஜயத்தில் இடம்பெற்றுள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு வழங்கவிருந்த நிதி வசதிகளை சர்வதேச நாணய நிதியம் நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top