செய்திகள்

மோசமான படுகொலையுடன் தொடர்புடைய 11 பேருக்கு விரைவில் வழக்கு – பாதுகாப்பு செயலாளர்.

hemasri fernando- defence sec

படை வீரர் எவரேனும் தவறிழைத்திருக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவவீரர் என கூறமுடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவ்வாறோனோருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று தெரிவித்த செயலாளர் படை வீரர் எவரேனும் தவறிழைத்திருக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக சட்டத்தை நிலை நாட்ட அரசாங்கம் தயங்காது என்றும் கூறினார்.

கொழும்பு நாலந்தா கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உரையாற்றினார்.
எந்தவொரு இராணுவ வீரரும் தவறிழைத்திருந்தால், அவருக்கு எதிராக சட்டத்தை நிலை நாட்ட தயங்கப்போவதில்லை என்று குறிப்பிட்ட பாதுகாப்புச்செயலாளர் ஒரு சிலர் இராணுவவீரர் என்ற பெயருக்கு தவறான அர்த்தம்கற்பிப்பதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

இலங்கையில் நிகழ்ந்த மிகவும் மோசமான படுகொலையுடன் தொடர்புடைய 11 பேருக்கு எதிராக விரைவில் வழக்குத் தொடுக்கப்படவுள்ளது. அப்போது புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கம் படைவீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவிலலைஎனகூறமுடியாது என்றும் பாதுகாப்புச்செயலாளர் வலியுறுத்தினார்.
சுமார் 4 700 ஆயுதங்கள் எந்தவித அடிப்படையுமின்றி பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கான அனைத்து அனுமதிப்பத்திரங்களும் தற்காலிமமாக இரத்துச்செய்யப்படவுள்ளன.ஆயுத உரிமையாளர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்து அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மேலும் கூறினார்.

(அ.த.தி)

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top