செய்திகள்

வந்துசேர்ந்தது ‘உத்தர தேவி’

uththaradevi train.jpg 2

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ்.13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதம் ‘உத்தர தேவி’, பயணிகளுடன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

கொழும்பிலிருந்து இன்று (27) காலையில் தனது பயணத்தை ஆரம்பித்த உத்தரதேவி பிற்பகல் 2.40 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

இந்த பயணத்தில் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், புகையிரத நிலைய அதிகாரிகள்   எனப் பலரும் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆகியோர் யாழ். பிரதான புகையிரத நிலையத்தில் வைத்து அவர்களை வரவேற்றனர்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

T.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top