சர்வதேசம்

வளைகுடா அரபு நாடுகளில் தொழில் வாய்ப்புக்கள் தேசியமயமாக்கப்படும் விகிதம் அதிகரிப்பு

dubai sheikh

2019 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு இரண்டு மடங்கு தேசியமயமாக்கப்படும் என்று துபாயின் ஆட்சியாளர் கூறி உள்ளார். இதனால் இந்திய தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என்று இந்திய ஊடகஅமான்று தகவல வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகியவற்றை தொடர்ந்தது 2019 ஆம் ஆண்டில் மேலும் வேலைவாய்ப்புகள் தேசியமயமாக்கப்படும் என்று துபாயின் எமிரேட் குறிப்pட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புகளை தேசியமயமாக்குவது துபாயில் 200 சதவிகிதம் அதிகரித்துள்ளது என ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று நான் அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். அதில் 2018 ஆம் ஆண்டின் விளைவு மற்றும் 2019க்கான திட்டத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். 2018 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புகளின் உள்ளூர்மயமாக்கல் 200% அதிகரித்தது. 2019 ஆம் ஆண்டில் அதனை இரட்டிப்பாக்க நாங்கள் முயற்சி செய்வோம் என ட்விட்டரில் கூறி உள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் வாழ்க்கை மற்றும் வேலை செய்து வருகின்றனர். துபாயின் ஆட்சியாளர்கள் 1999ம் ஆண்டில் வேலைவாய்ப்பை தேசியமயமாக்கல் ஆரம்பித்திருந்த போதிலும் அது பல ஆண்டுகளாக அது குறைந்தபட்சமாக இருந்தது. இருப்பினும் 2008 நிதியியல் நெருக்கடி பொருளாதாரத்தை பரவலாக்குவதற்கும் தனியார் துறைகளில் வேலைகளை தேர்ந்தெடுப்பதற்கு அதிக விகிதம் வேலைவாய்ப்பு தேசியமயமாக்கப்பட்டது. வளைகுடா அரபு குடிமக்கள் குறைந்த ஊதியங்கள் மற்றும் கடுமையான வேலை போன்ற காரணங்களால் தனியார் துறைகளில் சேர விரும்பவில்லை.

(அ.த.தி)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top