செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க துணைக்குழு

govt salary sub committee

அரச துறையில் சம்பளஆய்வுக்காக நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக துணைக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரச துறையில் உள்ள சம்பள கட்டமைப்பு ஆய்வு செய்து தற்பொழுது ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக தேவையான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு விசேட சம்பள மதிப்பீட்டு ஆணைக்குழுவொன்று அதிமேதகு ஜனாதிபதியினால் இதற்கு முன்னர் நியமிக்கபட்டது. இதற்கமைவாக இந்த விசேட ஆணைக்குழுவினால் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக மேற்கொள்ள வேண்டிய சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை அதிமேதகு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சிபாரிசுகள் தொடர்பில் ஆய்வு செய்து இறுதி பரிந்துரைகளை அமைச்சரவையிடம் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை துணைக்குழுவொன்றை நியமிப்பதற்கென அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top