செய்திகள்

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை வெற்றி

sl won 2nd test

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி 08 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் தொடரை இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணயசுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்கா அணி 61.2 ஓவரில் 222 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனையடுத்து போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 154 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி 128 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 02 விக்கட் இழப்பில் 197 ஓட்டங்களைப் பெற்று 08 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

(அ)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top